நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி வெளியாகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வருகிற 10ம் தேதி ரிலீஸ் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் இனி அடுத்த விஜய் நடிகர் சிவகார்த்திகேயன் தான். அவர்தான் விஜய் விட்ட இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க போகிறார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இது விஜய் ரசிகர்களையும் தவெக கட்சி தொண்டர்களையும் வெறுப்படைய செய்துள்ளது. விஜயின் 32 ஆண்டு கால கடின உழைப்பு திறமை ரசிகர்களின் அன்பு தான் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. சிவகார்த்திகேயன் அவரது நிழலை கூட நெருங்க முடியாது. அமரன் போன்ற ஓரிரு வெற்றிப் படங்களை கொடுத்து விட்டால் சிவகார்த்திகேயன், விஜய் ஆகி விட முடியாது என தளபதி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்த பராசக்தி படம், அரசியல் காரணங்களால் வருகிற 10ம் தேதி ரிலீஸ் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் படத்துக்கு வசூல் ரீதியாக நெருக்கடி தரவும் முயற்சி நடக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி விஜய் படத்துடன் தனது படம் மோதுவதால் சிவகார்த்திகேயனும் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே திரைப்பட இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர், பராசக்தி படம் குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். அதில், செம்மொழி என்ற தலைப்பில் நான் எழுதிய கதையை என் அனுமதி பெறாமல் பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதுகுறித்து விசாரித்து 2 கதைகளையும் ஒப்பிட்டு பார்த்து வரும் ஜனவரி 2ம் தேதி அறிக்கை சமர்பிக்க தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த அறிக்கை அடிப்படையில் தான் பராசக்தி படம் வரும் 10ம் தேதி வெளிவருமா, அல்லது கோர்ட் உத்தரவுபடி அந்த படம் வெளியீட்டில் சிக்கல் ஏற்படுமா என்ற விவரங்கள் முழுமையாக தெரிய வரும்.
பராசக்தி படத்துக்கு இப்படி ஒரு சட்டரீதியான நெருக்கடி வந்ததை அடுத்து தளபதி ரசிகர்களும் டிவிகே தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளனர். எங்ககிட்ட தேவையில்லாமல் மோதினால் இப்படி தான் ஏடாகூடமாக நடக்கும். ஜனநாயகன் படத்துக்கு இடையூறு பண்ண நீங்க நினைச்சாலும் அது நடக்காது. உங்க படத்துக்கே சட்ட சிக்கல் வந்துடுச்சே என்று இணையத்தில் பராசக்தி படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





