கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி விஜய் டிவியில் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 2 வாரங்களில் இந்த சீசன் நிறைவடைய உள்ளது. இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் விக்கல்ஸ் விக்ரம் கானா வினோத் திவ்யா கணேஷ் சாண்ட்ரா அரோரா மற்றும் சபரிநாதன் என 6 பேர் மட்டுமே இருந்து போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
இன்று கூடுதலாக ஏற்கனவே வீட்டை விட்டு வியானா மட்டும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். கடைசியாக பார்வதி கம்ருதீன் ரெட்கார்டு காட்டி வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்ததாக சுபிக்ஷா எவிக்சன் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போனார். அவருக்கு பிக்பாஸ் நிறைய வாழ்த்துகளை சொல்லி சுபிக்சா மை கேர்ள் என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் பைனலுக்குள் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் ஜெயித்த அரோரா முதல் ஆளாக உள்ளே நுழைந்திருக்கிறார். மீதமுள்ள 5 பேரில் யார் கடைசி வரை நீடிக்கப் போகிறார்கள்? டைட்டில் வின்னர் யார் ரன்னர் யார் என்பதில் பலத்த குழப்பம் நீடிக்கிறது. கானா வினோத்துக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பார்வையாளர்கள் தரப்பில் விமர்சனம் இருந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த சனிக்கிழமையன்று பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த கார் டாஸ்க்கின் போது சாண்ட்ராவை உதைத்து வெளியே தள்ளிய விவகாரத்தில் கம்ருதீன் பார்வதி இருவரும் ரெட்கார்டு காட்டி அந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து இந்த சீசனில் கலந்துக்கொண்ட பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் எஃப்ஜே ஆவேசமாக பேசியிருக்கிறார்.
அதுபற்றி எஃப்ஜே ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, அடுத்தவனை கீழே தள்ளிவிட்டு மேலே செல்ல வேண்டும் என நினைப்பது மிக கேவலமான எண்ணம். போட்டி என்றால் ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும். கீழ்த்தரமானதாக இருக்கக் கூடாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்காமல் எத்தனையோ பேர் ஏங்கிக் கொண்டு உள்ளனர். கிடைத்த வாய்ப்பை மக்களை மகிழ்விக்க பயன்படுத்தாமல் கீழ்த்தரமான முறையில் புகழ் தேட நினைக்கக் கூடாது.
நான் பிக்பாஸ் வீட்டில் அப்போது இருந்திருந்தால் ஆட்டத்தையே மாற்றி இருப்பேன். சாண்ட்ராவை வெளியே தள்ளிய பிறகு நான் அங்கு இருந்திருந்தால் என்னுடைய ஆட்டம் போனாலும் பரவாயில்லை என்று கம்ருதீனையும் பார்வதியையும் காரிலிருந்து வெளியே தள்ளியிருப்பேன். ஆட்டத்தை ஆரோக்கியமாக ஆடாமல் சண்டையிட்டால் நானும் சண்டையிட்டு பதிலடி கொடுத்திருப்பேன். ஆனால் பிக் பாஸ் சண்டைக்கான இடம் அல்ல என்று எஃப்ஜே பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.





