நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் அவரது கடைசி படமாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் 2 தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இது தெலுங்கில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் என்பதும் ரசிகர்களுக்கு ஒருவித அதிருப்தியை தந்துள்ளது.
இந்த நிலையில் இப்போது வரை ஜனநாயகன் படத்துக்கு சென்சார் போர்டு சான்றிதழ் தராமல் இழுத்தடித்து வருகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் சென்சார் போர்டு சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பதாகவும் ஒரு புகார் எழுந்துள்ளது.
இதனால் ஜனநாயகன் படம் குறிப்பிட்டபடி வருகிற 9ம் தேதி ரிலீஸ் ஆகிவிடுமா என்பதே பெரிய சந்தேகமாக உள்ளது. ஏனெனில் தணிக்கை சான்று பெறாமல் ஜனநாயகன் படத்தை தியேட்டர்களில் திரையிட முடியாது. அதே போல் 10ம் தேதி பராசக்தி படமும் ரிலீஸாக உள்ளதால் ஜனநாயகன் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.
இந்த சூழலில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டில் வெளியான மங்காத்தா படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் அஜீத்குமார் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா படம் நடிகர் அஜீத்குமாரின் 50வது படம். இது மிகப்பெரிய ஒரு வெற்றிப் படமாக இருந்து அஜீத்குமாருக்கு சூப்பர் கம்பேக் கொடுத்தது.
மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக் குழு திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் வருகிற 23ம் தேதி மங்காத்தா படம் ரி ரிலீஸ் செய்யப்படும் என்று படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது அஜீத்குமார் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் மங்காத்தா படம் ரி ரிலீஸ் செய்யப்படும் போது ஜனநாயகன் படத்தின் வசூலை அது மேலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஜனநாயகன் ரிலீஸான 2 வாரங்களில் மங்காத்தா ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்காக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் போது நிச்சயமாக ஜனநாயகனுக்கான தியேட்டர்களும் காட்சிகளும் கணிசமாக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.





