- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னால் வேதனை தாங்க முடியலே… இரவில் தூங்கவும் முடியலே… - பிரமோசன் நிகழ்ச்சியில் மேடையில் கதறி...

என்னால் வேதனை தாங்க முடியலே… இரவில் தூங்கவும் முடியலே… – பிரமோசன் நிகழ்ச்சியில் மேடையில் கதறி அழுத பிரபல நடிகை!

- Advertisement -

சில உண்மை சம்பவங்களை திரைப்படமாக உருவாக்கும் போது அது படம் பார்க்கும் ரசிகர்களை மட்டுமின்றி அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் மனங்களையும் பாதிக்கவே செய்கிறது. குறிப்பாக சில உண்மை சம்பவங்களை படம் பார்க்கும் போது, இப்படி எல்லாம் உண்மையில் நடந்ததா என்பதை அவர்கள் உணரும் போது நிச்சயமாக அது மனதில் வலியை ஏற்படுத்தும்.

அதிலும் குறிப்பாக சமீபகாலமாக பெண்கள் மீதான வன்முறை சம்பவங்களும் பாலியல் துன்புறுத்தல்களும் உலகம் முழுவதும் அதிகரித்து விட்டன. குடும்ப உறவுகளாலும் அதிகார வர்க்கத்தாலும் சமூக அழுத்தங்களாலும் பொருளாதார சிக்கல்களாலும் பல நேரங்களில் இதுபோன்ற மோசமான துன்புறுத்தல்களுக்கு பெண்களும் குறிப்பாக சிறுமிகளும் ஆளாகின்றனர். இந்த சம்பவத்தை தடுக்க சட்டம் இயற்றினாலும் கொடுமைகள் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன.

- Advertisement -

இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி மக்கள் மனங்களில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இன்னும் வடமாநிலங்களில் உணவுக்காக பணத்துக்காக என பெண்கள் சிறுமிகள் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்களை தினமும் சந்தித்து வருவதாக இதுகுறித்த ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகை பூமிகா. நடிகர் விஜய் நடித்த பத்ரி படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து ரோஜா கூட்டம் சில்லுன்னு ஒரு காதல் போன்ற படங்களில் பூமிகா நடித்திருக்கிறார். தமிழை விட இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பூமிகா அதிகமாக நடித்துள்ளார்.

- Advertisement -

தற்போது அவர் அக்கா அண்ணி போன்ற கேரக்டர்களில் நடித்து வருகிறார். இப்போது யூபோரியா என்ற படத்தில் பூமிகா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இந்த விழா மேடையில் பேசிய நடிகை பூமிகா, இந்த படத்தில் நடிக்க தொடங்கியது முதல் என்னால் நிம்மதியாக தூங்கவே முடியவில்லை. நள்ளிரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறேன் என்று பேசியபடி அழத் தொடங்கி விட்டார்.

அருகில் இருந்த மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தனர். பிறகு சில நிமிடங்களில் அவர் சகஜமானார். யூபோரியா படம் சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சம்பந்தப்பட்ட உண்மை சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை குணசேகர் டைரக்ட் செய்திருக்கிறார்.. இந்த படம் சார்ந்த உண்மைகளால் தன்னால் தூங்க முடியவில்லை என்று பூமிகா மேடையில் அழுதது இணையத்தில் வைரலானது.

- Advertisement -

சற்று முன்