- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி எஸ்கே என மாறிய ஆட்டம்… அந்த 2 இயக்குனர்கள் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்...

ரஜினி எஸ்கே என மாறிய ஆட்டம்… அந்த 2 இயக்குனர்கள் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல் – என்னப்பா இது என ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக அவர் நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாகவும் ஒரு தகவல் ஏற்கனவே வெளியாகி விட்டது.

இந்த படத்துக்கு தலைவர் 173 என்ற தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டது. முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்த இந்த படம் பிறகு அவர் வெளியேறியதால் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்வதாக கூறப்பட்டது. கடைசியில் அவர் இல்லை என்றும் அஸ்வத் மாரிமுத்து எச் வினோத் ஆகியோரிடம் ரஜினி கதை கேட்டதாகவும் சொல்லப்பட்டது.

- Advertisement -

ஆனால் கடந்த 3ம் தேதி காலை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீடியோவில் தலைவர் 173 படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதுவரை அவரது பெயரே இந்த லிஸ்ட்டில் இல்லாத நிலையில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் சிபிசக்ரவர்த்திக்கு ரஜினி நடிக்கும் 173வது படம், அவரது இயக்கத்தில் உருவாகும் 2வது படமாகும். இதற்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் என்ற படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு பிறகு 2வது படமே அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பு அமைந்துள்ளது.

- Advertisement -

ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்றால் சிபி சக்ரவர்த்தி அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருந்தார். அந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் தயாரிப்பதாக இருந்தார். இதற்கிடையே திடீரென ரஜினி படத்தை இயக்கும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்து விட்டது.

அதே போல் ரஜினி படத்தை இயக்குவதாக முதலில் தெரிவிக்கப்பட்ட பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்போது நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து அடுத்த படம் இயக்குவதற்கான வாய்ப்பு உருவாகி வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் படத்தை இயக்க கமிட் ஆன சிபி சக்ரவர்த்தி ரஜினி படத்தை இப்போது டைரக்ட் செய்வதும் ரஜினி படத்தை இயக்குவதாக இருந்த ராம்குமார் பாலகிருஷ்ணன் சிவகார்த்திகேயன் படத்தை இயக்க பேசி வருவதும் ரசிகர்களுக்கு பலத்த ஆச்சரியத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்