தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் பேரும் புகழும் சம்பாதித்தாலும் வெளிநாட்டில் செட்டிலாகி விடும் கனவுதான் எல்லோருக்கும் இருக்கிறது. பெரும்பாலான தமிழ்நாட்டு பெண்கள் கூட வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்கா லண்டன் என்று செட்டிலாகி விட வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர்.
ஏனென்றால் வெளிநாட்டில் வாழ்வது என்பது அவர்களது ஸ்டேட்டஸ் ஆக இருக்கிறது. வெளிநாட்டில் செட்டிலாகி விடுவதும் வாழ்க்கையில் ஒரு முக்கிய பொருளாதார முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கோடி கோடியாக சம்பாதிக்கும் சில சினிமா பிரபலங்களும் சத்தமே இல்லாமல் வெளிநாட்டில் செட்டிலாகி விடுகின்றனர்.
பாடகர் கே ஜே ஜேசுதாஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார். நடிகர்கள் சூர்யா ரவிமோகன் போன்றவர்கள் வெளிநாட்டுக்கு போகவில்லை என்றாலும் மும்பையில் செட்டிலாகி விட்டார். ஏனெனில் இந்தி பட வாய்பபுகளை அவர்கள் அதிகமாக எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
அதே போல் நடிகர் அஜீத்குமார் துபாயில் சொந்தமாக பங்களா வாங்கி அங்கே குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். விடாமுயற்சி குட்பேட் அக்லி படப்பிடிப்பின் இடையே அவர் சென்னைக்கு வராமல் துபாய் வீட்டில்தான் சென்று தங்கி ஓய்வெடுத்தார். இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா இருவருக்கும் துபாயில் சொந்தமான பங்களாக்கள் உள்ளன.
மேலும் அவர்களது இசை ஸ்டுடியோக்களும் அங்கு புதிதாக பல கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக ஏஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா இருவருமே துபாயில் உள்ள இசை ஸ்டுடியோவில் தான் தமிழ் படங்களுக்கான ரிக்கார்டிங் பணிகளை செய்து வருகின்றனர். நடிகர் மாதவன் மும்பையை சேர்ந்தவர் என்றாலும் அவரும் துபாயில் செட்டிலாகி விட்டார்.
இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனும் துபாயில் செட்டிலாகி விட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர் துபாயில் 2 சொகுசு பங்களாக்களை வாங்கி இருப்பதாகவும் குடும்பத்துடன் அங்கே குடியேறி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. குழந்தைகளின் கல்வி எதிர்காலம் கருதி இந்த முடிவுக்கு அவர் வந்ததாக சொல்லப்படுகிறது. இது உருட்டா உண்மையா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.





