- Advertisement -
Homeபொழுதுபோக்குமுன்னாள் மாமனார் ரஜினியுடன் மோத விரும்பாத நடிகர் தனுஷ், ஆனா அவங்க அப்படி ஒரு நெருக்கடியை...

முன்னாள் மாமனார் ரஜினியுடன் மோத விரும்பாத நடிகர் தனுஷ், ஆனா அவங்க அப்படி ஒரு நெருக்கடியை தர்றாங்களே? – பேச்சுவார்த்தை நடத்த முடிவு!

- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ஓம். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் 16ம் தேதி ரிலீஸ் செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அக்டோபர் 15ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் ரிலீஸ் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதனால் ரஜினிகாந்த் படத்துடன் மோத விரும்பாத நிலையில், நடிகர் தனுஷ் நடித்த ஓம் படம் வருகிற தீபாவளிக்கு தள்ளி போவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இப்போது அதில் சிக்கல் ஏற்பட்டதால் மீண்டும் அக்டோபர் 16ம் தேதிக்கே ஓம் படம் ரிலீஸ் மாற்றப்பட்டு உள்ளதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதற்கு காரணம் வருகிற தீபாவளிக்கு இந்தியில் ரன்பீர் கபூர் நடிகை சாய் பல்லவி கேஜிஎஃப் நடிகர் யஷ் நடித்த இராமாயணா படம் திரைக்கு வருகிறது. இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகும் வகையில் பான் வோர்ல்டு படமாக மிகப் பிரமாண்டமான ஒரு படைப்பாக பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த படம் பெரிய அளவில் கவனிக்கப்படா விட்டாலும் ஆந்திரா தெலங்கானா கர்நாடகா கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இராமாயணா படம் வெளியாகும் நேரத்தில் ஓம் படம் வெளியானால் எதிர்பார்த்த எண்ணிக்கையில் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தனுஷ் படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காது. அதனால் தீபாவளிக்கு ஓம் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனமும் அக்டோபர் 16ம் தேதி ஓம் படத்தை ரிலீஸ் செய்ய நெருக்கடி தருகிறது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அக்டோபர் 16ம் தேதி ஓம் படம் ரிலீஸ் செய்யப்பட்டால் அக்டோபர் 15ம் தேதி ரிலீஸாகும் ஜெயிலர் 2 படத்துடன் மோத வேண்டிய சூழல் உருவாகும். இதில் நடிகர் தனுஷூக்கு சிறிதும் விருப்பமில்லை.

தனது முன்னாள் மாமனார் ரஜினி படத்துக்கு எதிராக தனது ஓம் படம் களத்தில் இறங்குவதை தனுஷ் விரும்பவில்லை. இது தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும். விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தும் என்பதால் தனுஷ் இதை தவிர்க்க நினைக்கிறார். அதனால் இதுகுறித்து மும்பையில் உள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் தனுஷூம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் மறுக்கும் பட்சத்தில் ரஜினி படத்துடன் தனுஷ் படம் மோதுவது உறுதியாகிவிடும் என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்