- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த விஜய் பட இசையமைப்பாளர் - அட இந்த...

மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த விஜய் பட இசையமைப்பாளர் – அட இந்த ஹிட் பாடல்கள் எல்லாம் அவர் கொடுத்ததுதானா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர் இயக்குனர் வின்சென்ட் செல்வா. முரளி நடித்த இரணியன் விஜய் நடித்த யூத் சரத்குமார் ரமேஷ் நடித்த ஜித்தன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். பிறகு அவரது இயக்கத்தில் வெளியான ஜித்தன் 2 தோட்டா இங்க என்ன சொல்லுது போன்ற படங்கள் தொடர்தோல்வியை தழுவியது.

சினிமாவை பொருத்த வரை தொடர் வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் ஹீரோ என யாராக இருந்தாலும் அடுத்தடுத்த தோல்வி படங்களை தரும்போது அவர்களுக்கான மார்க்கெட் வேல்யூ குறைந்துவிடும். பிறகு அவர்களது படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வர மாட்டார்கள். இயக்குனர் வின்சென்ட் செல்வாவுக்கும் அதே போல் பட வாய்ப்புகள் பல ஆண்டுகளாக இல்லை.

- Advertisement -

இப்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் வின்சென்ட் செல்வா சுப்ரமணி என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நட்டி நடராஜ் ரிச்சார்ட் ரிஷி இருவரும் முதன்மை கேரக்டர்களில் நடிக்கின்றனர். மீண்டும் தனது திறமையை நிரூபிக்கும் விதமாக ஒரு புதிய கதைக்களத்தில் சுப்ரமணி படத்தை வின்சென்ட் செல்வா உருவாக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் மணி சர்மா. குறிப்பாக நடிகர் விஜய் நடித்த ஷாஜகான் சுறா திருப்பாச்சி யூத் போக்கிரி ஆகிய ஐந்து படங்களுக்கு மணிசர்மா இசையமைத்திருக்கிறார். குறிப்பாக ஷாஜகான் படத்தில் இடம்பெற்ற மின்னலை பிடித்து மின்னலை பிடித்து என்ற பாடலும் யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி பாடலும் மிகப்பெரிய அளவில் விஜய்க்கு புகழைத் தேடித் தந்த பாடல்களாக இருந்தன.

- Advertisement -

கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் திரைப்படங்களுக்கு இசையமைக்காமல் இருந்த மணிசர்மா மீண்டும் தமிழ் சினிமாவில் இசையமைக்க வந்திருக்கிறார். இயக்குனர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் சுப்ரமணி படத்துக்கு மணி சர்மா இசையமைக்கிறார். 90 கிட்ஸ் ரசிக்கும் ஒரு இசையமைப்பாளர் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

மேலும் ஆரம்ப காலத்தில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மிஷ்கின். இன்றைய முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக உள்ள மிஷ்கின், தனது குருநாதர் இயக்கும் இந்த சுப்ரமணி படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த வாய்ப்பை அவரே கேட்டுப் பெற்றதாகவும் ஒரு தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்