சினிமா ஆசையும் அரசியல் ஆசையும் யாரையும் விட்டு வைக்காது போல இருக்கிறது. விஜயை தொடர்ந்து அடுத்து அரசியல் களத்தில் குதிக்க நடிகர் தனுஷ் தயாராகி விட்டதாக தெரிய வந்துள்ளது. அதே போல் இன்னும் சில பிரபல நடிகர்களும் அரசியல் களத்தில் என்ட்ரி கொடுக்க திட்டமிட்டு வருவதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
அதே போல் இயக்குனராக இருப்பவர்கள் நடிகர்களாக மாறுவதும் நடிகர்களாக இருப்பவர்கள் இயக்குனர்களாக மாறுவதும் தமிழ் சினிமாவில் புதிது அல்ல. அந்த வகையில் இப்போது தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் ஒருவர் நடிகராக களத்தில் இறங்க உள்ளார். அவரது தம்பியும் பிரபலமான நடிகர்தான்.
தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தவர் கேப்டன் விஜயகாந்த். நடந்த 1980 90களில் நடிகர் விஜயகாந்த் முன்னணி நடிகராக ரஜினி கமலுக்கு அடுத்த நிலையில் இருந்தார். அதன்பிறகு தனது நண்பர் இப்ராகிம் ராவுத்தா் பெயரில் தயாரிப்பாளராக மாறி பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்.
அதிலும் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு அதிகமாக முதல் படத்தை இயக்கும் வாய்ப்பளித்த பெருமை கேப்டன் விஜயகாந்த் சேரும். மேலும் தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கி விஜயகாந்த் அரசியல் களத்திலும் ஒரு பெரிய அடையாளமாக மாறினார் என்பது குறிப்பிடப்பட்டது. அவரது மறைவுக்குப் பிறகு அவரது இளைய மகன் சினிமாவிலும் மூத்த மகன் அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றனர் .
கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம் மதுரவீரன் படை தலைவன் கொம்பு சீவி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவரது படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் இயக்குனர் திரு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்தில் வில்லனாக தனி ஒருவன் ஜெயம் சந்தோஷ் சுப்பிரமணியம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போகன் போன்ற ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ராஜா வில்லனாக நடிக்கிறார் இவர் நடிகர் ரவி மோகனின் உடன்பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இயக்குனராக இருந்த மோகன்ராஜா இப்போது வில்லனாக களத்தில் இறங்கி இருக்கிறார். தம்பி ரவிமோகனுக்கு போட்டியாக அண்ணனும் நடிப்பில் ஜொலிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.





