சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஆதவன். இவர் சில சீரியல்களில் நடித்திருக்கிறார். சில திரைப்படங்களில் சின்ன ரோல்களில் காமெடி காட்சிகளிலும் நடித்திருக்கிறார். நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் குறித்து ஆதவன் வெளியிட்ட வீடியோ இன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் நடிகர் ஆதவன் கூறியிருப்பதாவது, பகவந்த் கேசரி என்ற படமே ஒரு ரீமேக் தான். இது பல பேருக்கு தெரியாது. சின்ன வயசுல இருந்தே சினிமா தவிர வேற எதுவும் எனக்கு தெரியாது. சினிமா எல்லாம் நிறைய பார்ப்பேன். நிறைய சினிமா பார்க்கிற போது சில கதைகள் இது எங்கிருந்து எடுத்தாங்க என்பது தெரிந்து விடும்.
ஒரு வயதானவர் இறந்து போகிற போது அவரது குழந்தையை பார்த்துகிற வளர்க்கிற பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அந்த குழந்தை அவர் மீது ரொம்பவும் பாசமாக இருக்கிறது. இவரை சூப்பர் மேன் சூப்பர் மேன் என்று கூப்பிடுகிறது. அந்த குழந்தைக்காக அவர் வேற கல்யாணமும் பண்ணிக்கலே. அவருக்கு வாழ்க்கையில் வேறு எந்த லட்சியமும் இல்லாமல் வாழ்கிறார்.
அந்த பெண்ணை நல்ல முறையில் படிக்க வெச்சு அந்த பெண்ணை வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார். இதுதான் மதிப்பிற்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாபு என்கிற படம். இந்த படத்தை போன வாரம்தான் நான் ஏதேச்சையாக பார்த்தேன்.
இந்த படம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு பார்த்தா அதுதான் சீன் பை சீன் பகவந்த் கேசரி படம். பாபு படத்தில் சிவாஜி வளர்க்கிற பெண் வெண்ணிற ஆடை நிர்மலா. அந்த பொண்ணு வளர்ந்து காலேஜ் போகும். அங்கே சிவக்குமாரை லவ் பண்ணும். அப்போ சிவக்குமார் உனக்கு நான் முக்கியமா, மாமா முக்கியமா என்று கேட்க எனக்கு மாமா ( சிவாஜி) தான் முக்கியம் என்று போய்விடும்.
இது எல்லாமே அப்படியே பகவந்த் கேசரி படத்தில் இருக்கிறது. பகவந்த் கேசரி படத்தில் இருக்கிற மாதிரியே ஜனநாயகன் படத்திலேேயும் இருக்கும். அதனால் ஆல்ரெடி பகவந்த் கேசரி எடுக்கப்பட்டதே பாபு படத்தை பார்த்துதான். பாபு படம் பகவந்த் கேசரி ஆகி இப்போது ஜனநாயகன் படமாக மாறியிருக்கிறது. அதனால் இது ஒரு ஜனபாபு கேசரி. பழைய படம் என்றாலும் பார்ப்போம் என்று நடிகர் ஆதவன் அந்த வீடியோவில் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.





