- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக… பொங்கல் பண்டிகைக்கு டிவி சானல்களில் ஒளிபரப்பாகும் புதிய படங்கள் -...

இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக… பொங்கல் பண்டிகைக்கு டிவி சானல்களில் ஒளிபரப்பாகும் புதிய படங்கள் – போடு வெடிய!

- Advertisement -

தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலம் என்றாலே தியேட்டர்களில் புதிய படங்கள் ரிலீஸ் என்கிற பரபரப்பு வந்து விடுகிறது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அதிக படங்கள் இதுபோன்ற பண்டிகை காலங்களில் வருவதில்லை. பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்கள் எப்போது வந்தாலுமே பெரிய வெற்றியை வசூலை பெற்று விடுகின்றன.

ஆனால் இயக்குனர்கள் சுந்தர் சி ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் பண்டிகை கால படங்கள் என சில பண்டிகைகளை குறி வைத்தே படம் எடுக்கின்றனர். ஏனென்றால் பண்டிகை கால தொடர் விடுமுறை ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகளவில் வருகை என்பதால் தியேட்டர்களில் வசூல் டபுள் மடங்காக இருக்கும் என்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.

- Advertisement -

சினிமா தியேட்டர்களை போலவே பண்டிகை நாட்களை டிவி சானல்கள் முன்பு அமர்ந்தே கழிக்கும் மக்கள் கூட்டமும் அதிகமாக உள்ளது. பட்டிமன்றம் சிறப்பு திரைப்படங்கள் சினிமா சார்ந்த சிறப்பு நிகழ்ச்சிகளை இந்த விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் கண்டுகளிப்பது பெரும்பாலான மக்களின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் டிவி சானல்களிலும் சிறப்பு படங்கள் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

அந்த வகையில் முன்னணி டிவி சானல்களில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் டிவியில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்த பைசன் திரைப்படமும் ஹரீஷ் கல்யாண் நடித்த டீசல் திரைப்படமும் நாளை 15ம் தேதி ஒளிபரப்பாகிறது. நாளை மறுதினம் 16ம் தேதி சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ;பேமிலி படமும் விஜய் ஆண்டனி நடித்த சக்தி திருமகன் படமும் ஒளிபரப்பாக உள்ளது.

- Advertisement -

விஜய் டிவியில் வருகிற 17ம் தேதி அதர்வா நடித்த விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் படமான டிஎன்ஏ படம் ஒளிபரப்பாக உள்ளது. இதேபோல் சன் டிவியில் வரும் 15ம் தேதி நாளை நடிகர் தனுஷ் நித்யாமேனன் நடித்த திருச்சிற்றம்பலம் சூர்யா பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ திரைப்படங்கள்.வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்தே மற்றும் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி போன்ற படங்கள் ஒளிபரப்பாகின்றன.

அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாளை 15ம் தேதி நடிகர் சூரி நடித்த மாமன் படமும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ருக்மணி வசந்த் நடித்த மதராஸி படமும் ஒளிபரப்பாக உள்ளது. ஜனவரி 16ம் தேதி நடிகர் விஜய் சினேகா நடித்த தி கோட் படமும் நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா படமும் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

சற்று முன்