- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பா மாமா சார் என்று பலர் என்னை கூப்பிடுறாங்க… ஆனா அதை விட இப்படி கூப்பிட்டா...

அப்பா மாமா சார் என்று பலர் என்னை கூப்பிடுறாங்க… ஆனா அதை விட இப்படி கூப்பிட்டா தான் எனக்கு பெரிய சந்தோஷம் – திடீரென வீடியோவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்!

- Advertisement -

கோவையில் உள்ள அக்ரிகல்சர் யுனிவர்சிடியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் இறையன்பு ஐஏஎஸ் முன்னாள் போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் சம்மந்தி வணங்காமுடி உள்ளிட்டோர் இந்த மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களாக பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு வீடியோ வெளியிட்டு அதில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, கோவையில் உள்ள அக்ரிகல்சர் யுனிவர்சிடியில் படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்க உள்ள நிகழ்ச்சி நடக்கிறது. இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது.

- Advertisement -

தமிழக அரசு முன்னாள் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் முன்னாள் போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் என்னுடைய சம்மந்தி கோவையை சேர்ந்த வணங்காமுடி உள்ளிட்டோர் இதில் முன்னாள் மாணவர்களாக தங்களுடன் படித்த சக மாணவர்களை 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பது மிகப்பெரிய உற்சாகத்தை சந்தோஷத்தை தருகிறது.

இறையன்பு ஒரு படித்த மேதையாக இருக்கிறார். அவரது அறிவாற்றல் கற்றல் திறன் பாராட்டுக்குரியது. அவர் படித்ததை எல்லாம் மக்களுக்கு சொல்லும் விதம் அசாத்தியமானது. அதே போல் போலீஸ் அதிகாரியாக பணிசெய்த சைலேந்திர பாபு மிக அற்புதமான ஒரு மனிதர். அவர் போலீஸ் உடையில் இருந்தால் சினிமா ஹீரோக்களை விட கம்பீரமாக தெரிவார்.

- Advertisement -

எப்போதுமே நண்பர்களை சந்திப்பது மிகப்பெரிய உற்சாகத்தை தரும். நான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது பெங்களூரு சென்று என்னுடன் பணிசெய்த டிரைவர்கள் கண்டக்டர்கள் நண்பர்களை எல்லாம் சந்திப்பேன். அப்போது அவர்கள் என்னடா சிவாஜி என்று கேட்கும்போதுதான் என்னுடைய பெயரையே நான் மறந்து விட்டது எனக்கு நினைவுக்கு வரும். நண்பர்களை சந்திப்பது பெரிய உற்சாகத்தை புத்துணர்ச்சியை மனதுக்கு தருகிறது.

என்னை அப்பா மாமா மச்சான் தாத்தா சார் என பல விதங்களில் அழைத்தாலும் டேய் இங்க வாடா எப்படீடா இருக்கே என்று நண்பர்கள் உரிமையாக பேசும் போது அதில் கிடைக்கிற சந்தோஷமே தனிதான். நண்பர்கள் அமைவதும் அவர்களை அடிக்கடி சந்திப்பதும் பெரிய பாக்கியம். நீங்களும் உங்களது நண்பர்களை அடிக்கடி சந்தியுங்கள். அது பெரிய புத்துணர்ச்சியை வாழ்க்கையில் ஏற்படுத்தும் என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்