- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படத்தின் கதையை ஓப்பனாக போட்டு உடைத்த தயாரிப்பாளர், சஸ்பன்ஸையே இப்படி வெளிப்படையா சொல்லிட்டாரே

கங்குவா படத்தின் கதையை ஓப்பனாக போட்டு உடைத்த தயாரிப்பாளர், சஸ்பன்ஸையே இப்படி வெளிப்படையா சொல்லிட்டாரே

- Advertisement -

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “கங்குவா”. இத்திரைப்படம் ஒரு வரலாற்று ஃபேண்டசி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திசா படானி நடித்து வருகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இத்திரைப்படம் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் தயாரிப்பாளர் தனஞ்சயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ‘கங்குவா” திரைப்படத்தை குறித்த சஸ்பென்ஸ் பலவற்றையும் உடைத்துவிட்டார்.

“கங்குவா படத்தின் பாடல் காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக இந்த பாடல் காட்சி முடிவடைந்தபிறகு படக்குழுவினர் கொடைக்கானலுக்கு செல்கிறார்கள். கொடைக்கானலில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

- Advertisement -

அந்த 40 நாட்களும் போர் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. மிக பெரிய பொருட்செலவில் போர் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அந்த போர் காட்சிகள் முடிவடைந்தால் ஓரளவு 90 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்தது போல்தான். வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது” என அப்பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “மகதீரா திரைப்படத்தை போலவே ஓரளவு கதையம்சம் கொண்ட படமாக இது இருக்கும். ஆனால் அத்திரைப்படத்தை போல முற்பிறவி கான்செப்ட் எல்லாம் இல்லை. கங்குவா வேறு மாதிரியான கான்செப்ட். நாம் எல்லோரும் பல ஜென்மங்களை கடந்துதான் வந்திருப்போம். நாம் கடந்து வந்த ஏதோ ஒரு ஜென்மத்திற்கும் இப்போதுள்ள நிகழ்காலத்தில் உள்ள  நமக்கும் திடீரென ஒரு தொடர்பு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பதுதான் கங்குவா படத்தின் கதை” என அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

- Advertisement -

சற்று முன்