- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னம் வழங்கியது - தமிழக வெற்றிக் கழகத்தின் நிரந்தர...

நடிகர் விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னம் வழங்கியது – தமிழக வெற்றிக் கழகத்தின் நிரந்தர சின்னம் இதுதான் – போடு வெடிய!

- Advertisement -

ஒரு அரசியல் கட்சிக்கு பிரதானமாக 3 விஷயங்கள் அமைய வேண்டும். அதுதான் மக்கள் மத்தியில் காலம் காலமாக நிலைத்து நிற்கும். கட்சியின் அடையாளங்களாக அந்த விஷயங்கள் காலப்போக்கில் மாறிவிடும். அந்த வகையில் ஒரு அரசியல் கட்சிக்கு பெயர் மிக முக்கியம். அடுத்து கட்சிக் கொடியும் கட்சிக்கான சின்னமும் மிக மிக முக்கியமானதாக இருக்கிறது.

அந்த வகையில் பாஜக என்றால் தாமரை, காங்கிரஸ் என்றால் கை, அதிமுக என்றால் இரட்டை இலை திமுக என்றால் உதயசூரியன் பாமக என்றால் மாம்பழம் மதிமுக என்றால் பம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூ., என்றால் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் இந்திய கம்யூ., என்றால் கதிர் அரிவாள் என அந்தந்த சின்னங்களே கட்சிக்கு அடையாளங்களாக மாறி விடுகின்றன.

- Advertisement -

இன்றைய தமிழக அரசியல் சூழலில் முக்கிய கட்சியாக முன்னால் நிற்பது 2 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் தான். நிச்சயமாக தவெக கட்சி தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றத்தை வருகிற சட்டசபை தேர்தலில் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

எம்ஜிஆர் விஜயகாந்த் இருவருக்கு பிறகு சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களில் விஜய்க்கு மட்டுமே மக்கள் மத்தியில் பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தவெக கட்சியில் இணைந்த பிறகு மேலும் கட்சிக்கு வலிமை அதிகரித்துள்ளது.

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தமிழில் தவெக என்றாலும் ஆங்கிலத்தில் டிவிகே என்றும் அழைக்கப்படுகிறது. மஞ்சள் சிவப்பு நிறங்கள் கொண்ட கட்சி கொடியில் 2 யானைகள் அதற்கு நடுவில் வாகை மலர் நட்சத்திரங்கள் என்று கட்சிக் கொடியும் நல்ல ஒரு அடையாளத்தை பெற்றிருக்கிறது. இதற்கிடையே கட்சிக்கு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் தவெக கட்சி தலைமை கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தவெக கட்சிக்கு மோதிரம் ஆட்டோ அல்லது விசில் சின்னம் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இப்போது இந்திய தேர்தல் ஆணையம் நடிகர் விஜயின் தவெக கட்சிக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிகில் படத்தில் விஜய் நடித்த நிலையில் விசில் சின்னம் கிடைத்திருப்பதை தளபதி ரசிகர்களும் தவெக கட்சியினரும் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்