- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் ஒரு பண்டிகை நாளில் உங்களை சந்திக்க வருகிறோம் - லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம்...

விரைவில் ஒரு பண்டிகை நாளில் உங்களை சந்திக்க வருகிறோம் – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் குறித்து அப்டேட் தந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!

- Advertisement -

சிம்பு வரலட்சுமி சரத்குமார் நடித்த போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். தொடர்ந்து நானும் ரவுடிதான் தானா சேர்ந்த கூட்டம் காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்எஸ் லலித்குமார் தயாரிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – எல்ஐகே என்ற படத்தை விக்னேஷ் சிவன் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். மேலும் சீமான் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி படம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அவரே இயக்கி நடித்த லவ் டுடே படமும் மாஸ் ஹிட் படமாக பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது அவரது டிராகன் படமும் சக்கைப் போடு போட்டுள்ளதால் எல்ஐகே படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் எல்ஐகே படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ஒவ்வொருவரிடமிருந்தும் மிகுந்த ஆர்வம் அன்பு நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றோடு அனைவராலும் உருவாக்கப்பட்டது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் நிறைய சவால்கள் இருந்தன. ஆனால் நாங்கள் புன்னகைக்கவும் எங்கள் வேலைகளை ரசிக்கவும் மறக்கவில்லை. இந்த காட்சிகளின் ஆதரவு இல்லாமல் நாங்கள் உருவாக்க முயற்சித்த எந்த மேஜிக்கும் சாத்தியமில்லை.

ஒவ்வொரு காட்சிக்கும் கூட சமரசம் செய்யாமல் ஒரு அசலான புதிய பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம். உங்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுடன் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தொடங்குகின்றன. ஒரு சிறப்பான பண்டிகை நாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாட வருகிறோம் என்று விக்னேஷ் சிவன் அந்த பதிவில் கூறியிருக்கிறார். மேலும் சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.

சற்று முன்