- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை பார்த்து என் அம்மா அப்படி ஒரு கேள்வியை கேட்டார்… அது நடந்து விட்டது -...

என்னை பார்த்து என் அம்மா அப்படி ஒரு கேள்வியை கேட்டார்… அது நடந்து விட்டது – தனது பிறந்த நாளில் உண்மையை சொன்ன இயக்குனர் கே பாக்யராஜ்!

- Advertisement -

கடந்த 1980 90களில் பல சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கே பாக்யராஜ். சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் இன்று போய் நாளை வா தூறல் நின்னு போச்சு முந்தானை முடிச்சு அந்த 7 நாட்கள் மௌனகீதங்கள் தாவணிக்கனவுகள் சின்னவீடு இது நம்ம ஆளு என பல அருமையான படங்களை ரசிகர்களுக்கு தந்தவர்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களாக கொண்டாடப்படும் இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும் அவர் தமிழ் சினிமாவில் பயணத்தைத் தொடங்கி 50 ஆண்டுகால நிறைவு விழாவையும் இப்போது கொண்டாடி வருகிறார். இன்று அவருக்கு திரை பிரபலங்கள் பலரும், ஏராளமான ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துககளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இதற்கிடையே இன்று நடிகர் கே பாக்யராஜ் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த சில ஆண்டுகளாக நான் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். இப்போது மீண்டும் படம் மற்றும் வெப் சீரிஸ் இயக்க ஆர்வமாக உள்ளேன். சினிமாவுக்கு வர அப்போது நண்பர்கள் உதவினார்கள்.

அப்புறம் இயக்குனர் பாரதிராஜாவிடம் சேர்ந்தேன். 16 வயதினிலே படத்தில் என் பெயர் வந்தது. அந்த படத்தின் வெற்றி பலருக்கு மாற்றத்தை கொண்டு வந்தது. அதில் நானும் ஒருவன். சமீபத்தில் கமலிடம் பேசிய போது கூட இதை அவர் குறிப்பிட்டார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்தேன். பின்னர் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆனேன். அடுத்து ஹீரோ ஆனேன். அதற்கு பிறகுதான் இயக்குனர் ஆனேன்.

- Advertisement -

கிழக்கே போகும் ரயில் படத்தில் தற்செயலாக ஒரு கேரக்டரில் அதுவும் ஒரு சின்ன ரோலில் நடித்தேன். அதை பார்த்த என் அம்மா நீ ஏன் ஹீரோவாக நடிக்க கூடாதுன்னு கேட்டார். அதற்கு தனி திறமை வேண்டும் என்று சொன்னேன். நீ ஹீரோ ஆவாய். உன் இயக்குனர் நடிக்க வைப்பார் என்றார். அவர் சொன்னது போலவே புதிய வார்ப்புகள் படத்தில் நடந்தது.

நான் உதவி இயக்குனர் ஆக இருந்தபோது, எனக்கு பின்னால் என் பெயரை காப்பாற்றும் வகையில் பாக்யராஜ் வருவார் என்று இயக்குனர் பாரதிராஜா சொன்னார் என்று தனது சினிமாவின் ஆரம்ப கால வாழ்க்கை குறித்து வெளிப்படையாக இயக்குனர் கே பாக்யராஜ் பேசியிருக்கிறார். கே பாக்யராஜின் மகன் சாந்தனு பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்