- Advertisement -
Homeபொழுதுபோக்கு37 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிய நடிகர் ரஜினிகாந்த் படம்…இப்போது திரைக்கு வருகிறதா? - உற்சாகத்தில்...

37 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிய நடிகர் ரஜினிகாந்த் படம்…இப்போது திரைக்கு வருகிறதா? – உற்சாகத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். கூலி படத்துக்கு பிறகு அவர் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இப்போது கேரளாவில் அதிரம்பள்ளி பால்ஸ் பகுதியில் இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் தலைவர் 173 படத்தில் நடிக்க கமிட் ஆன நிலையில் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

தமிழில் மட்டும் இன்றி நடிகர் ரஜினிகாந்த் தெலுங்கு கன்னடம் இந்தி மலையாளம் பெங்காலி ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக 1980களில் ரஜினிகாந்த் பல இந்தி படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார். அப்போது 1989ம் ஆண்டில் ரஜினி நடிப்பில் உருவான படம் ஹம் மே ஷஹென்ஷா கோன்.

இந்த படத்தை நடிகை ரீனா ராயின் சகோதரர் ராஜா ராய் தயாரித்திருந்தார். இயக்குனர் ஹர்மேஷ் மல்கோத்ரா டைரக்ட் செய்திருந்தார். படத்துக்கு லட்சுமி காந்த் பியாரிலால் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சத்ருகன் சின்ஹா ஹேமாமாலினி அனிதா ராஜ் மறைந்த நடிகர்கள் அம்ரிஷ் பூரி ஜெகதீப் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

35 எம்எம் ஈஸ்ட்மன் கலரில் உருவான இந்த படம், படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சென்சார் செய்யப்படாமல் படம் ரிலீஸ் குறித்து எதுவும் தெரிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் காலமான நிலையில் இந்த படம் வெளியீடு 37 ஆண்டுகளாக நடக்கவில்லை. இந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

எனினும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர்கள் தற்போது இந்த படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் முயற்சித்து வந்த நிலையில் இப்போது அதில் வெற்றி பெற்றுள்ளனர். ஹம் மே ஷஹென்ஷா கோன் படத்தை ஏஐ மூலம் மீள் பதிவு செய்து 4 கே தரத்தில் 5.1 டிஜிட்டல் ஒலியில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்த படத்தை வெளியிடுவதற்காக சம்பந்தப்பட்ட நடிகர்களிடமிருந்து என்ஓசி பெறப்பட்டுள்ளது.

ஹம் மே ஷஹென்ஷா கோன் படத்தின் வெளியீடு குறித்து நடிகர் ரஜினிகாந்திடமும் அவர்கள் பேசியுள்ளனர். இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு ரஜினி நேரில் வரும்படி அழைக்க இருப்பதாகவும் தெரிகிறது. இந்திய திரையுலகின் முக்கிய நடிகர்கள் நடித்த இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 37 ஆண்டுகளாக முடங்கி கிடந்த நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் இப்போது திரைக்கு வருவது இந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தந்துள்ளது.

சற்று முன்