- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யா நடிக்கும் 50வது படம்… தயாரிப்பாளர் இயக்குனர் யார் என்பது குறித்து முடிவு பண்ணியாச்சு...

நடிகர் சூர்யா நடிக்கும் 50வது படம்… தயாரிப்பாளர் இயக்குனர் யார் என்பது குறித்து முடிவு பண்ணியாச்சு – தரமான சம்பவத்துக்கு தயாரான நடிகர் சூர்யா!

- Advertisement -

நடிகர் சூர்யா ரெட்ரோ படத்துக்கு பிறகு நடித்த அவரது 45வது படம் கருப்பு. வருகிற பிப்ரவரி 19ம் தேதி அந்த படம் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே நடிகர் சூர்யா தனது 46வது படம் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்திருக்கிறார். 47வது படம் மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே அவரது 48வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார் என்றார். சூர்யாவின் 49வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வௌியாகி உள்ளது. இதுதவிர அவர் தனது 51 மற்றும் 52வது படங்களை தனது ழகரம் பவுண்டேசன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சொந்தமாகவே தயாரிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் சூர்யா நடிக்கும் 50வது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவார். அது வாடிவாசல் படமாக தான் இருக்கும் என்று சூர்யா ரசிகர்கள் பலத்த ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் கண்டிப்பாக அந்த படம் இல்லை என்பது இப்போது தெளிவாகி விட்டது.

நடிகர் சூர்யா தனது 50வது படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பெரிய தயாரிப்பு நிறுவனம் சார்பில் நட்சத்திர இயக்குனர் டைரக்ட் செய்ய வேண்டும். இந்த படம் தனது சினிமா பயணத்தில் ஒரு மைல் கல்லாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் அவரது நியாயமான ஆசை இப்போது நிறைவேறி விட்டது. அந்த வகையில்தான் சூர்யா 50 படம் உருவாக உள்ளது.

- Advertisement -

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 50வது படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் டைரக்ட் செய்கிறார். ஏற்கனவே தனது படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனமும் வரவேற்பும் பெற்றவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அவர் இயக்கிய பரியேறும் பெருமாள் கர்ணன் மாமன்னன் வாழை போன்ற படங்கள் சர்ச்சையாக இருந்தாலும் வெற்றிப் படங்களாக இருந்தன.

இயக்குனர் மாரி செல்வராஜ் ஏற்கனவே 3 படங்களை கமிட் செய்திருக்கிறார். தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதி நடிக்கும் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். நடிகர்கள் தனுஷ் கார்த்தி படங்களையும் அவர் இயக்க ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இப்போது சூர்யாவின் 50வது படத்தை டைரக்ட் செய்யப் போவது இயக்குனர் மாரி செல்வராஜ்தான் என்பது உறுதியாகி விட்டது.

- Advertisement -

சற்று முன்