- Advertisement -
Homeபொழுதுபோக்குஏவிஎம் தயாரிப்பில் உருவான முரட்டுக்காளை; இந்த மெகா ஹிட் படத்தில் ரஜினிகாந்த் நடித்தது எப்படி?...

ஏவிஎம் தயாரிப்பில் உருவான முரட்டுக்காளை; இந்த மெகா ஹிட் படத்தில் ரஜினிகாந்த் நடித்தது எப்படி? அவரே சொன்ன தகவல்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இதுவரை 170 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். கடந்த 1975ம் ஆண்டில் அவர் அறிமுகமான படம் அபூர்வ ராகங்கள். இந்த படத்தை இயக்குனர் கே பாலசந்தர் இயக்கி இருந்தார். கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி ரஜினி நடிப்பில் 170வது படமாக வெளிவந்த படம் வேட்டையன். இந்த படத்தை தசெ ஞானவேல் ராஜா இயக்கி இருந்தார்.

வேட்டையன் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கூலி என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படம் ரஜினிக்கு 171வது படமாக உள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகர்ஜூனா, உபேந்திரா, அமீர்கான் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கூலி படத்தை தொடர்ந்து ரஜினி, ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார்.

- Advertisement -

ரஜினி நடிப்பில், கடந்த 1980ம் ஆண்டு டிசம்பரில் வெளியான படம் முரட்டுக்காளை. இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. பொதுவாக எம்மனசு தங்கம் என்ற இந்த படத்தில் இடம்பெற்ற பாடல், இப்போதும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் டிரண்டிங்கில் உள்ளது. இந்த படத்தில் நடித்தது குறித்து ரஜினிகாந்த், ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து ரஜினி கூறியதாவது, தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம், பல வருஷங்களுக்கு பிறகு மீண்டும் படம் தயாரிக்க வருகின்றனர். அப்போது செட்டியார் சார் இருந்தார். மறுபடியும் இன்டஸ்ட்ரிக்கு வருகிறோம். யாரை வைத்து படம் எடுக்கலாம் என்று அவர் யோசித்திருக்கிறார். அவர் பஞ்சு அருணாசலத்திடம் இதுபற்றி கேட்டிருக்கிறார்.

- Advertisement -

அப்போது அவர், ரஜினியை வெச்சு எடுங்க, நான் கதை எழுதுகிறேன். படம் பெருசா இருக்கும். ரஜினியை புக் பண்ணுங்க, நீங்க பாருங்க என்று சொல்லியிருக்கிறார். அப்புறம்தான் முரட்டுக்காளை படம் உருவானது. இதுவரை அப்படி ஒரு வில்லேஜ் சப்ஜெக்ட் படம் வந்தது இல்லை. மிகப்பெரிய ஹிட் தந்தது.

பிறகு பஞ்சு அருணாசலத்தில் பிஏ ஆர்ட்ஸ் தயாரிப்பில் எங்கேயோ கேட்ட குரல், ஆறில் இருந்து அறுபது வரை படங்களில் நடித்தேன். பெண்களுக்கு பிடித்தமான அந்த அழுத்தமான, ஆழமான கதைகளில் என்னை அவர் நடிக்க வைத்தார். பேன்ஸ் பசங்க, இளைஞர்கள் இருக்காங்க. பெண்கள் மத்தியிலும் பேர் வாங்கணும், குடும்பத்துக்குள்ள போகணும் என்று சொல்லி இந்த படங்களை என்னை பண்ண வைத்தார் என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்