தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஜீவா. அவர் கதாநாயகனாக அறிமுகமான படம் ஆசை ஆசையாய். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். டிஸ்யூம் சிவா மனசுல சக்தி தெனாவெட்டு ஈ நண்பன் கோ ரௌத்திரம் என பல படங்களில் ஜீவா சிறப்பாக நடித்திருக்கிறார்.
கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரும் ஜீவா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் இளைய மகன் என்பது பலரும் அறிந்த தகவல்தான்.
பொங்கலுக்கு வெளியான பராசக்தி வா வாத்தியார் படங்களை காட்டிலும் நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படத்துக்கு தான் மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் ரசிகர்களிடம் கிடைத்துள்ளது. திருமண வீடு துக்க வீடு என 2 அடுத்தடுத்த வீடுகளில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை மையப்படுத்தி இந்த படத்தை மலையாள இயக்குனர் நிதிஷ் சஹதேவ் இயக்கி உள்ளார்.
மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழ் நாட்டில் மட்டுமே 30 கோடி ரூபாய்க்கு வசூலை அள்ளியிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக தமிழில் பெரிய வெற்றிப் படங்களே இல்லாமல் இருந்த நடிகர் ஜீவாவுக்கு இந்த படம் சூப்பர் கம்பேக் தந்திருக்கிறது. கணிசமான லாபத்தை அள்ளித் தந்துள்ளது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜீவா கூறியதாவது, ஆசை ஆசையாய் என்ற படம் தான் நான் நடித்த முதல் படம். அந்த படத்துல நடிக்கும்போது நாசர் சார் என்கிட்ட சரியாவே பேசவே மாட்டார். ஒரு தடவை என்னை கூப்பிட்டு ஏன் டயலாக் எல்லாம் பிரிப்பேர் பண்ண மாட்டியா? என்று கேட்டார்.
அதற்கு நான், இல்லே சார். அவங்க சொல்ல சொல்ல நான் அப்படியே சொல்லிடுவேன். டைரக்டர் தெரிஞ்சவர் தான் என்று சொன்னேன். புரடியூசர் பையன் என்றால் நேரடியா கிளம்பி வந்துடுவீங்களாடா நடிகன்னு என்று பச்சையா என்னை கேட்டார் நாசர் என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





