நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தின் நடித்து முடித்திருக்கிறார். நாளையுடன் இந்த படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிக்கும் தலைவர் 173 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி டைரக்ட் செய்கிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இதைத் தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்ய உள்ளார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் பிரமோ ஷூட் வரும் பிப்ரவரி மாதம் சன் ஸ்டுடியோவில் பெரிய ஷெட் அமைத்து எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது, அப்பாவை எவ்வளவு கொண்டாடினாலும் அது போதாது. ஒரே சூரியன் ஒரே சந்திரன் மாதிரி ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது அப்பா மட்டும்தான். அப்பா சினிமாவில் சாதித்தது மாதிரி அவருடைய இடத்துக்கு வேற யாராலும் வர முடியாது. அதுதான் 100 சதவீத உண்மையும் கூட.
அவரோட 50 வருஷம் என்பது சினிமாவில் சாதாரணமான சாதனை இல்லை. அவருடைய மகளாக நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. அப்பாவுக்கு பெரிய விழா எடுத்துக் கொண்டாடணும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனா எங்கே இருந்து எப்படி ஆரம்பிப்பது என்று தான் தெரியவில்லை .
அப்பாவோ சினிமா பயணத்தில் 50 வருஷத்துக்கு படையப்பா படத்தை ரி ரிலீஸ் பண்ணவேண்டும் என்று அப்பா நினைச்சிருந்தார். 25 வருஷமாக திரும்பவும் திரைக்கு வராத ஒரு படம் என்பதால் அப்பா அதை விரும்பினார். 50வது ஆண்டு கொண்டாட்டத்துக்காக படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்தோம். ஆனால் அதை ஒரு விழாவாக ஏன் கொண்டாடவில்லை என்றால் அதை எங்கே தொடங்குவது என்று எங்களுக்கு புரியவில்லை.
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அப்பா இப்போது அவருடைய சுயசரிதை நூலை எழுதும் வேலைகளை ஆரம்பித்து விட்டார். அவரது வாழ்க்கை வரலாறு கண்டிப்பாக குளோபல் சென்சேஷன் ஆக இருக்கும் என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். அதனால் ரஜினி தனது சுய சரிதை நூலை அவரே எழுதி வருவது உறுதியாகி உள்ளது.





