- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்கள் செல்வன் தாக்கு பிடிப்பாரா? நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பிக்பாஸ் சர்ச்சை பிரபலம் -...

மக்கள் செல்வன் தாக்கு பிடிப்பாரா? நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பிக்பாஸ் சர்ச்சை பிரபலம் – அட இந்த டிவிஸ்ட்டை யாருமே எதிர்பார்க்கலையே…?

- Advertisement -

கடந்த 2017ம் ஆண்டு முதல் கடந்த 9 ஆண்டுகளாக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. முதலில் 7 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிசெய்து வருகிறார். சமீபத்தில் தான் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி நடந்து நிறைவடைந்தது.

நடிகர் கமல்ஹாசனை போல நடிகர் விஜய் சேதுபதி மழுப்பலாகவும் மறைமுகமாகவும் பேசாமல் நேரடியாக போட்டியாளர்களை தாக்கி பேசுவது அவரது பாணியாக உள்ளது. சில நேரங்களில் விஜய் சேதுபதி போட்டியாளர்களின் தவறுகளை நேரடியாக அட்டாக் செய்வது பிக்பாஸ் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது.

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி 2வது ஆண்டாக தொகுத்து வழங்கிய இந்த 9வது சீசனில் டைட்டில் வின்னராக சீரியல் நடிகை திவ்யா கணேஷ் வெற்றி பெற்றார். அவரை அடுத்து சபரிநாதன் 2ம் இடத்தில் ரன்னராக வெற்றி பெற்றார். மேலும் விக்கல்ஸ் விக்ரம் 3ம் இடமும் அரோரா 4வது இடமும் வெற்றனர். இவர்கள் 4 பேரும் தான் இறுதி போட்டியாளர்களாக கடைசி நாள் வரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 9வது சீசனை பொருத்த வரை பிக்பாஸ் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு போட்டியாளர் என்றால் அது விஜே பார்வதி தான். பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் செய்த அட்ராசிட்டிகளையும் கலாட்டாக்களையும் இந்த சீசனை பார்த்த யாராலும் மறக்க முடியாது. அவரது பேச்சும் நடவடிக்கைகளும் பலரை திடுக்கிட வைத்து விட்டது என்பதே கசப்பான உண்மை.

- Advertisement -

பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த கார் டாஸ்க்கில் சக போட்டியாளர் சாண்ட்ராவை பார்வதி எட்டி உதைத்து வெளியே தள்ளிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பார்வதியும் அவருடன் இருந்த கம்ருதீனும் ரெட்கார்டு காட்டப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். எனினும் பிக்பாஸ் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கம்ருதீன் பார்வதி இருவருமே பங்கேற்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இப்போது முத்து என்கிற காட்டான் என்கிற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்த சீரிஸில் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் பிரபலம் விஜே பார்வதியும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெப் சீரிஸின் தயாரிப்பளரே விஜய் சேதுபதிதான் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீரிஸில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்