சினிமா என்பதே ஒரு போலித்தனமான நாடகம்தான். அதில் வரும் பெரும்பாலான காட்சிகளும் கற்பனையில் சிந்தித்து, அதை காட்சியாக உருவாக்குவதுதான். எந்த ஹீரோவும் 100 பேரை அடித்து சாய்க்கவும் முடியாது. மின்னல் வேகத்தில் ஓடுகிற ரயிலில் தாவி ஏறிவிடவும் முடியாது.
யதார்த்தங்களை மீறியதாக சினிமா இருந்தாலும் கலையாக அதில் பலரது திறமை உண்மையாக வெளிப்படுவதால் அதை மக்கள் ரசிக்கின்றனர். கோடிக்கணக்கில் அவர்களது வருமானத்தில் நடிகர், நடிகையர், இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என சம்பளமாக வாங்கி குவிக்கின்றனர்.
நேற்று மாலை விடாமுயற்சி படத்தில் இருந்து நடிகர் அஜீத்குமார் திரிஷா பங்கேற்ற முதல் பாடல் காட்சி வெளியாகி இணையத்தில் பயங்கர வைரலானது. 2 ஆண்டுகளுக்கு பின் அஜீத்குமாரை திரையில் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பொங்கலுக்கு விடாமுயற்சி படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சவடீகா என்ற பாடலை பார்த்து அசந்துபோன ரசிகர்கள், அந்த பாடலில் இடம்பெற்ற இசையை கேட்டு அதிர்ந்து போய்விட்டனர். ஏனெனில் இந்த ஆண்டில் வெளியான பகத் பாசில் நடித்த மலையாள படம் ஆவேசம். இந்த படத்தில் இடம்பெற்ற எலுமினாட்டி பாடல் இசையை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக இந்த பாட்டு இசையமைத்துள்ளார் அனிருத் என்பது தெரிய வந்துள்ளது.
ஒரு படத்தில் இசையமைக்க ரூ. 17 கோடி சம்பளம் கேட்கும் ஒரு இசையமைப்பாளர் இப்படி மற்றொரு படத்தில் இடம்பெற்ற பாடலை காப்பியடித்து, ரசிகர்களை ஏமாற்றுவது தரக்குறைவான செயல் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுவும் இந்த ஆண்டில் வெளியான ஆவேசம் மலையாள படத்தில் இருந்தே பாடலை சுட்டிருக்கிறாரே என்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.
எத்தனையோ திறமைசாலிகள், இசைக்கலைஞர்கள், இசை வல்லுனர்கள் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இசைத்துறையில் சாதிக்க முடியாமல் திறமை இருந்தும் முடங்கிப் போய் இருக்கின்றனர். ஆனால் அனிருத் போன்ற போலி அடையாளங்கள், இசையமைப்பாளர் போர்வையில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுவதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





