இந்திய சினிமா ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் சில படங்களில் நடித்த அவர் பிறகு தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அடையாளத்தை பெற்றார்.
தொடர்ந்து இயக்குனர் சுகுமாறன் இயக்கத்தில் ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக புஷ்பா புஷ்பா 2 படங்களில் நடித்து இந்திய அளவில் ரசிகர்களின் கவனம் பெற்ற ஒரு நட்சத்திர நடிகையாக மாறினார். மேலும் இந்தியில் அனிமல் படத்தில் நடித்து மேலும் பாலிவுட்டிலும் ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்பட்டார்.
தமிழில் நடிகர் விஜயுடன் வாரிசு என்ற படத்திலும் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் என்ற படத்திலும் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். ஆனால் இந்த 2 படங்களுமே பெரிய வரவேற்பை வெற்றியை பெறாததால் தமிழில் அதிக வாய்ப்புகளை ராஷ்மிகா பெறவில்லை. அடுத்து குபேரா படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.
கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் நடிகர் விஜய் தேவர கொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று வந்த நிலையில் அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
சில ஆண்டுகளாக அவர்கள் இருவரும் நெருக்கமாக காதலித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர்கள் இருக்கும் இரு தரப்பைச் சேர்ந்த பெற்றோர்கள் உறவினர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது. அப்போது இருவரும் மோதிரங்கள் மாற்றிக் கொண்டதாகவும் இணையத்தில் புகைப்படங்கள் வைரலானது.
இந்நிலையில் வரும் 26ம் தேதி உதய்பூரில் உள்ள ஒரு பிரமாண்ட அரண்மனையில் மிகவும் விமரிசையாக விஜய தேவரகொண்டா ராஷ்மிகா திருமணம் நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் பரவியது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம், உதய்பூரில் வரும் 26ம் தேதி உங்கள் திருமணமா? என்று சிலர் கேட்ட போது அப்படி எல்லாம் எதுவும் இல்லையே என்று ராஷ்மிகா மறுத்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பலத்த குழப்பத்தை தந்துள்ளது.





