- Advertisement -
Homeபொழுதுபோக்குதுபாயில் அஜீத்குமாருடன் செல்பி எடுக்க 30 திராம் வசூலிப்பது உண்மையா? - நடந்த சம்பவம் குறித்து...

துபாயில் அஜீத்குமாருடன் செல்பி எடுக்க 30 திராம் வசூலிப்பது உண்மையா? – நடந்த சம்பவம் குறித்து பிரபலம் தந்த விளக்கம்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக துபாயில் நடந்து வரும் கார் ரேஸில் பங்கேற்றுள்ளார். அங்கு அவருடன் புகைப்படம் எடுக்க வரும் ரசிகர்களிடம் 30 திராம் அதாவது இந்திய பண மதிப்பில் 750 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்டுவதாக தகவல் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோடிக்கணக்கில் நடிகர்கள் சம்பளம் வாங்குவதே ரசிகர்கள்தான். அவர்களது படங்களை தியேட்டர்களுக்கு சென்று பார்த்து ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் செவழிக்கின்றனர். அதனால் அந்த படம் ஜெயிக்கிறது. அப்படிப்பட்ட ரசிகர்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க கட்டணம் வசூலிப்பது நியாயமே இல்லை என்று பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

- Advertisement -

இதுகுறித்து வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, நடிகர் அஜீத்குமாருடன் துபாயில் புகைப்படம் எடுக்க 30 திராம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அஜீத்குமார் பங்கேற்கும் ரேஸை காண்பதற்காக அங்கு வரும் பார்வையாளர்களிடம் நுழைவு கட்டணம் தான் 30 திராம் என்று நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது.

ரசிகர்கள் தரும் 30 திராம் கட்டணம் கார் ரேஸ் நடத்தும் நிறுவனம் தான் வசூலிக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஒரு சம்பவம் குறித்து வீடியோவில் பேசிய பிஸ்மி கூறியதாவது, சமீபத்தில் நடந்த ஒரு கார் ரேஸில் நடிகர் அஜீத்குமார் கடைசியாக வந்துள்ளார். அதாவது அந்த ரேஸில் அவர் தோல்வி அடைந்து விட்டார்.

- Advertisement -

இதுவரை அவர் 3 5 மற்றும் 7வது இடங்களில் கார் ரேஸில் வந்துள்ள நிலையில் கடைசியாக வந்தது இதுதான் முதல்முறை. அதனால் அவர் அப்செட் ஆன ஒரு விரக்தியான மனநிலையில்தான் பெவிலியன் பகுதிக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அவருடன் புகைப்படம் எடுப்பதற்காக 500 பேர் வரை ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ரசிகர்கள் திரண்டு காத்திருந்தனர்.

அந்த மனநிலையிலும் அஜீத்குமார் அங்கு இருந்த அனைத்து ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதிலும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்காக உயரம் குறைந்த அவர்களுக்காக மண்டியிட்டு அமர்ந்து அவர்களுடன் போட்டோவுக்கு அஜீத்குமார் போஸ் தந்திருக்கிறார் என்று பிஸ்மி அந்த வீடியோவில் நடிகர் அஜீத்குமார் குறித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்