- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் படத்திற்காக ரெடின் கிங்ஸ்லீ வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? - விவரம் இதோ

ஜெயிலர் படத்திற்காக ரெடின் கிங்ஸ்லீ வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? – விவரம் இதோ

- Advertisement -

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய “ஜெயிலர்” திரைப்படமானது தற்போது முதல் வாரத்தை கடந்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இந்த ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், கிங்ஸ் லீ, வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன் என்கிற நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Jailer

மல்டி ஸ்டாரர் திரைப்படமாக வெளியாகியுள்ள இந்த ஜெயிலர் படமானது தமிழ் திரையுலுகை தாண்டி இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. அதோடு உலகெங்கிலும் வசூல் சாதனையை நிகழ்த்தி வரும் இந்த படத்தின் முதல் வாரம் முடிவடைந்த கையோடு ஜெயிலர் திரைப்பட குழுவானது வெற்றி விழாவையும் கொண்டாடியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதன் அதன்படி ஏற்கனவே பல்வேறு நட்சத்திரங்களின் சம்பள விவரம் வெளியாகி இருந்த வேளையில் இந்த படத்தில் சிறிய காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரெடின் கிங்ஸ்லீ சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

Kingsley

அதன்படி நெல்சன் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களிலும் தவறாமல் இடம்பெறும் ரெடின் கிங்ஸ்லீக்கே இந்த படத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் சரியான நேரத்தில் நகைச்சுவையான இடங்களில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது என்று பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்திற்காக ரெடின் கிங்ஸ்லீ ரூபாய் 25 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முழு நேர காமெடியனாக இல்லாமல் இருந்தாலும் பகுதிநேர காமெடியனாக வரும் ரெடின் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது அனைவரது மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்