- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகராக ஜெயித்த தனுஷ், இயக்குனராக தோற்று விட்டாரா? 75 கோடி ரூபாய் வசூலை கடந்தும், ராயன்...

நடிகராக ஜெயித்த தனுஷ், இயக்குனராக தோற்று விட்டாரா? 75 கோடி ரூபாய் வசூலை கடந்தும், ராயன் படத்துக்கு இன்னும் சர்ச்சை குறையலையே…? – தனுஷ் யோசிப்பாரா?

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் அறிமுகமான போது பயங்கரமாக உருவ கேலிக்கு ஆளானார். ஒல்லிப்பிச்சான் நடிகர் என்றெல்லாம் பலரும் கிண்டலடித்தனர். ஏனெனில் அவரது ஒல்லியான, கருப்பான உருவம், ஹீரோயிசத்துக்கு பொருத்தமானதாக இருக்கவில்லை.

ஆனால் உருவத்தோற்றம் முக்கியமில்லை, திறமைதான் முக்கியம் என்பதை நிரூபித்து காட்டும் விதமாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்து, முன்னணி நடிகராக தனுஷ் வெற்றி பெற்றார். அவரது நடிப்பில் வெளியான காதல் கொண்டேன், திருடா திருடி, பொல்லாதவன், தேவதையை கண்டேன், யாரடி நீ மோகினி, புதுப்பேட்டை, ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தனுஷ் வேற லெவல் நடிகராக ஒரு கட்டத்தில் மாறிவிட்டார்.

- Advertisement -

இதற்கிைடயே ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகன் ஆன பிறகு இன்னும் தனுஷின் மார்க்கெட் வேற லெவலில் உருவானது. எனினும் அவர் தனது சொந்த திறமையால், நடிப்பால் மட்டுமே முன்னுக்கு வந்தார். மாமனார் ரஜினி பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ப பாண்டி என்ற படத்தை இயக்கிய நடிகர் தனுஷ், இப்போது ராயன் என்ற தனது 50வது படத்தை அவரே எழுதி இயக்கி நடித்துள்ளார். வெளியான 4 நாட்களில் ராயன் படம் 75 கோடி ரூபாயை கடந்துள்ளது. இன்னும் சில தினங்களில் 100 கோடி ரூபாய் வசூல் பட்டியலில் ராயனும் இணைந்து விடும் என்று சொல்லப்படுகிறது. எனினும் ராயன் படம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

- Advertisement -

ராயன் படம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆலங்குடி வெள்ளசாமி என்பவர் கூறியிருப்பதாவது, ஒரு நடிகராக தனுஷ் ராயன் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் ஒரு இயக்குனராக அவர் இந்த படத்தில் தோற்றுவிட்டார். நடிகரின் வேலை நடிப்பது மட்டும்தான். ஆனால் ஒரு இயக்குனர் சமுதாயத்துக்கு நல்ல கருத்துள்ள விஷயத்தை படத்தில் சொல்ல வேண்டும்.

ஆனால் ராயன் படத்தில் இயக்குனராக என்ன செய்திருக்கிறார் என்றால், படத்தில் கதையே இல்லை. படம் முழுக்க அடிதடி, சண்டை, வெட்டு, குத்து, கொலை என்று வன்முறை காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார். பார்ப்பவர்களை எல்லாம் குத்தூசியால் குத்தி கொல்கிறார். முதலில் அவரது மகன்களுடன் அமர்ந்து இந்த படத்தை தனுஷ் பார்ப்பாரா, பார்க்க தான் முடியுமா, தரமான கதையை படமாக்காத காரணத்தால் ராயன் படத்தின் இயக்குனராக தனுஷ் தோற்றுவிட்டார், என்று அவர் விமர்சித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்