- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னோட படம் ஓடாதுன்னு அவர் நெனைச்சுட்டார்… ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி அவருக்கும் எனக்கும் சண்டையே நடக்கும்...

என்னோட படம் ஓடாதுன்னு அவர் நெனைச்சுட்டார்… ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி அவருக்கும் எனக்கும் சண்டையே நடக்கும் – இயக்குனர் மிஷ்கின் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் பாடகர் என பன்முக தன்மை கொண்டவர் மிஷ்கின். நிறைய படிப்பவர். எப்போதும் அவர் வாசிக்கும் பழக்கம் கொண்டவர். படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் கூட அவரது கையில் ஏதேனும் ஒரு புத்தகம் காணப்படும். புத்தக பிரியராக நிரந்தர வாசகராக மிஷ்கின் இருக்கிறார்.

ஆரம்பத்தில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தார். பிறகு நடிகர் நரேன் பாவனா நடித்த சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மிஷ்கின் அறிமுகமானார். தொடர்ந்து அஞ்சாதே பிசாசு முகமூடி ஓநாயும் ஆட்டுக்குட்டியும் யுத்தம் செய் துப்பறிவாளன் சைக்கோ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தார்.

இதில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் பேசப்பட்டது. அதே போல் உதயநிதி ஸ்டாலின் கண் பார்வையற்ற கேரக்டரில் நடித்த சைக்கோ படமும் திரில்லர் படமாக ரசிகர்களால் அதிக கவம் பெற்றது. மிஷ்கின் இயக்குனராக மட்டுமின்றி டிராகன் வணங்கான் சவரக்கத்தி லியோ என பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.

சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது கூறியதாவது, அஞ்சாதே படத்தோட கதையை பாண்டியராஜன்கிட்ட நான் சொன்னேன். அப்போது, தம்பி அட்ரஸ் மாறி தப்பா என்கிட்ட வந்துட்டியா? நான் எப்படி வில்லனா நடிக்க முடியும்? நான் நடிச்ச படங்களை எல்லாம் பார்த்திருக்கியான்னு கேட்டார்.

அதற்கு நான், ஆண்பாவம் படம் மட்டும் கொஞ்சம் பார்த்து இருக்கேன்னு சொன்னேன். அப்படியா? நான் எவ்வளவு க்யூட்டா அதுல இருந்தேன்? என்னை எப்படி வில்லன் ஆக்குறேன்னு அவர் கேட்டார். இல்லே சார். நான் தேடி வந்த கதாபாத்திரத்திற்கு நீங்கதான் சரியான ஆளாக இருப்பீங்க என்று சொல்லி அவரை சம்மதிக்க வெச்சேன்.

ஆனால் அஞ்சாதே சூட்டிங் ஸ்பாட்டில் அப்போது எனக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வரும். கடுமையாக ரெண்டு பேரும் வாக்குவாதம் செஞ்சுக்குவோம். டப்பிங் கூட பாண்டிராஜன் 2வது டேக் எடுக்க மாட்டார். அஞ்சாதே படம் ஓடாது என்று அவர் நினைச்சார் என்று இயக்குனர் மிஷ்கின் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். அஞ்சாதே படம் பெரிய வெற்றிப் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்