- Advertisement -
Homeபொழுதுபோக்குகதை சொல்ல ஆர்வமாக போன இயக்குனர் வெற்றிமாறன்… நீங்க என்கிட்ட கதை சொல்ல வேணாம் -...

கதை சொல்ல ஆர்வமாக போன இயக்குனர் வெற்றிமாறன்… நீங்க என்கிட்ட கதை சொல்ல வேணாம் – அதிரடியாக சொன்ன நடிகர் தனுஷ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டுமே தனியாக அடையாளம் காணப்படுகின்றனர். கமர்ஷியல் படங்களை தர பல இயக்குனர்கள் இருந்தாலும் நல்ல ஆத்மார்த்தமான அழுத்தமான படைப்புகளை திரைப்படங்களாக தர வேண்டும் என்கிற முனைப்பு சில இயக்குனர்களிடம் மட்டுமே காணப்படுகிறது. அதில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன்.

பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் அடுத்து ஆடுகளம் அசுரன் விசாரணை வடசென்னை விடுதலை விடுதலை 2 உள்ளிட்ட படங்களை இயக்கியவர். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெற்றிப் படங்களாக கொடுத்தவர். இயக்குனர் வெற்றிமாறன் இப்போது சிம்பு நடிப்பில் அரசன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

நடிகர் தனுஷ் நடித்த பொல்லாதவன் அசுரன் ஆடுகளம் வடசென்னை ஆகிய 4 படங்களை இயக்கியவர் வெற்றிமாறன்தான். இந்த 4 படங்களுமே சூப்பர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடிகர் பாடகர் இயக்குனர் மட்டுமின்றி தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தனுஷ் குறித்து பேசிய இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது, விசாரணை படத்தை தயாரிக்க தனுஷ்கிட்ட கேட்கலாம் என்று நேரில் போனேன். அப்போது அவரிடம், நான் விசாரணை ன்னு ஒரு சின்ன படம் பண்ண போறேன். ஒரு நாலு பசங்க அப்படீன்னு கதையை சொல்ல ஆரம்பித்தேன்.

- Advertisement -

உடனே தனுஷ், வேணாம் சார். நீங்க கதை சொல்ல வேண்டாம். நீங்க கதை சொன்னா எனக்கு பிடிச்சு போயிடும். அப்புறம் நான் நடிக்கிறேன் என்று சொல்லுவேன். உங்களுக்கு தான் இன்னும் தாமதமாகும் என்று சொன்னார். ஏன்னா அப்போ அவர் ஒரு இந்தி படத்தில் நடிக்கிறதா இருந்துச்சு. அதனால் நீங்க படத்துக்கு என்ன பட்ஜெட்டுன்னு மட்டும் சொல்லுங்க. நான் பணம் கொடுக்கிறேன். நீங்க படத்தை எடுங்கன்னு சொன்னார்.

நான் அப்புறம் படத்தை எடுத்துட்டு முடிச்சுட்டேன். அதுக்கு அப்புறம் சார் நீங்க தயாரிப்பாளர். படத்தை ஒரு தடவையாவது பாருங்க என்று சொன்னேன். அப்பவும் தனுஷ் பாக்கலே. இப்படி ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் மேல இவ்வளவு நம்பிக்கை வைக்கிறது ரொம்பவும் கஷ்டம் என்று இயக்குனர் வெற்றிமாறன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்