- Advertisement -
Homeபொழுதுபோக்குலீடர் படத்தை தொடர்ந்து என்னோட 3வது படமும் அவருக்கு தான் - நடிகர் லெஜண்ட் சரவணன்...

லீடர் படத்தை தொடர்ந்து என்னோட 3வது படமும் அவருக்கு தான் – நடிகர் லெஜண்ட் சரவணன் எடுத்த முடிவு!

- Advertisement -

சினிமாவில் ஆரம்பத்தில் கிண்டலும் கேலியும் செய்யப்பட்ட பல கலைஞர்கள் பின்னாளில் மிகப்பெரிய நட்சத்திர கலைஞர்களாக மாறியிருக்கின்றனர். அவர்களை மறந்துவிட்டு தமிழ் சினிமா வரலாறை சொல்ல முடியாது என்கிற அளவுக்கு தவிர்க்க முடியாத கலைஞர்களாக ஜெயித்திருக்கின்றனர்.

நடிகர் திலகம் சிவாஜியை குதிரை மூஞ்சி போல உள்ளது என்று ஆரம்பத்தில் சொன்னார்களாம். அதே போல் ரஜினி கருப்பாக இருக்கிறார், பேசுவதே புரியவில்லை என்று விமர்சனம் செய்திருக்கின்றனர். விஜயை தகர டப்பா முகம் என்று ஒரு வார பத்திரிகையே எழுதியது. தனுஷை ஒல்லிப்பிச்சான் நடிகர் என்றார்கள்.

- Advertisement -

ஆனால் இப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தளபதி விஜய் இயக்குனர் தயாரிப்பாளராக வலம் வரும் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் அடையாளங்கள் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. உழைப்பும் திறமையும் உள்ளவர்கள் எல்லா விமர்சனங்களையும் கடந்து நின்று ஜெயிக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி என அழைக்கப்படும் சரவணன் அருள் ஆரம்பத்தில் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்தார். பலரும் கிண்டல் செய்தனர். அதன்பிறகு லெஜண்ட் என்ற படத்தில் அவரே ஹீரோவாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

- Advertisement -

இந்த படத்தை பலரும் டிரோல் செய்து கலாய்த்தனர். எனினும் அவர் அந்த கிண்டல் கேலி எல்லாம் பொருட்படுத்தாமல் இப்போது தனது அடுத்த படத்தில் நடித்துள்ளார். அதுவும் படத்துக்கு லீடர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் ரசிகர்களின் மத்தியில் நல்ல கவனமும் பெற்றுள்ளது.

கொடி கருடன் படங்களின் இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் லீடர் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதையடுத்து தனது 3வது படத்தை இயக்கும் வாய்ப்பையும் இயக்குனர் துரை செந்தில் குமாருக்கு லெஜண்ட் சரவணன் தந்துள்ளார். துரை செந்தில்குமாரின் உழைப்பு திறமை ஷூட்டிங்கில் அவரது அணுகும் முறை பழகும் விதம் எல்லாம் கவர்ந்ததால் மீண்டும் அவருக்கு இந்த வாய்ப்பை லெஜண்ட் சரவணன் அளித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்