- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் பையனை அப்படி சொல்றாங்க… அது கொஞ்சம் கூட உண்மை இல்லே… நானும் அவமானப்பட்டவன் தான்...

என் பையனை அப்படி சொல்றாங்க… அது கொஞ்சம் கூட உண்மை இல்லே… நானும் அவமானப்பட்டவன் தான் – ஆதங்கப்பட்ட இயக்குனர் விக்ரமன் !

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன்.ஆடம்பரம் பிரமாண்டம் நட்சத்திர நடிகர்கள் என கமர்ஷியல் படங்களை தந்த இயக்குனர்களுக்கு மத்தியில் யதார்த்தமான கதைக்களத்தில் சின்ன பட்ஜெட் படங்களை கொடுத்து பிரமாண்ட வெற்றியை பெற்ற வித்தைக்காரர் விக்ரமன் என்றால் அது மிகையல்ல.

தமிழ் சினிமாவில் இயக்குனராக அவர் இயக்கிய முதல் படம் புது வசந்தம். முரளி சித்தாரா சுரேஷ் சார்லி ஆனந்தபாபு ராஜா மற்றும் குமரிமுத்து லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக உள்ளது. நடிகர் முரளிக்கு ஒரு திருப்புமுனை படமாக புது வசந்தம் படம் இருந்தது.

அதே போல் நடிகர் விஜய்க்கு பூவே உனக்காக படம் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெண் ரசிகைகளிடம் பெற்றுத் தந்தது. இந்த படத்துக்கு பிறகுதான் விஜய் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு நட்சத்திர நடிகராக மாறினார். அதுவரை அவர் நடித்த படங்கள் எல்லாம் பிளே பாய் கேரக்டராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வானத்தை போல சூரியவம்சம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை நினைத்து போன்ற நல்ல படங்களை தந்தவர் இயக்குனர் விக்ரமன். ஆனால் அவரது மனைவிக்கு உடல் நலம் இல்லாததால் சமீபகாலமாக விக்ரமன் படங்களை இயக்குவதில்லை. ஆனால் அவரது மகன் விஜய் கனிஷ்காவும் நடிகராக நடிக்க வந்து விட்டார்.

தனது மகன் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் விக்ரமன் ஆதங்கமாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது விக்ரமன் கூறியதாவது, என் பையனை நெப்போ கிட்டுன்னு சொல்றாங்க. ஆனால் அவன் என்றைக்கும் என்னுடைய பெயரை பயன்படுத்தி சினிமாவில் வந்தது இல்லை. அவனாக முயற்சி பண்ணி தான் சினிமாவுக்கு வந்தான்.

எந்த தயாரிப்பாளர் கிட்டேயும் நான் இயக்குனர் விக்ரமன் பையன் என்று அவன் இதுவரைக்கும் சொன்னது கிடையாது. சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த போது நான் பட்ட அவமானங்களை விட அவன்தான் அதிகமாக அவமானப்பட்டு இருக்கிறான் என்று இயக்குனர் விக்ரமன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்