- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 அப்டேட் டூப்பு பத்தி பேசி, ஊர்க்காவலன் படம் டூப்பு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துடுச்சே?...

ஜெயிலர் 2 அப்டேட் டூப்பு பத்தி பேசி, ஊர்க்காவலன் படம் டூப்பு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துடுச்சே? – சூப்பர் ஸ்டாரே இப்படி பயந்தா எப்படி?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் 1.5 மாதங்களில் முடிவடைய உள்ளது. அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதே போல் லோகேஷ் கனகராஜூம் கைதி 2 படத்தை டைரக்ட் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க உள்ள ஜெயிலர் 2 படத்தின் அறிமுக வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது. இதில் படத்தின் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் இருவரும் கோவாவில் உள்ள ஒரு கடற்கரை ஓர பில்டிங் ஓய்வாக இருந்து பேசிக்கொள்வது போல காட்சி இருந்தது.

- Advertisement -

அதில் இருவரும் ஜெயிலர் 2 படம் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது திடீரென அங்கு வரும் சிலர், கத்தியால் குத்தப்பட்டு அரிவாளால் வெட்டப்பட்டு, துப்பாக்கி சுடப்பட்டு கீழே விழுகின்றனர். அப்போது அங்கு ரஜினி போன்ற ஒரு ஸ்டைலில் ஒரு கேரக்டர் நடந்து வருகிறது. பிறகு பங்களாவுக்கு வெளியே செல்ல அந்த பங்களாவே வெடித்து சிதறுகிறது.

இந்த காட்சியில் ரஜினிக்கு பதிலாக டூப் நடிகர் நடித்திருப்பதாக அந்த வீடியோவை பார்த்த பலரும் விமர்சித்தனர். ஏனெனில் ரஜினியின் உடல் மொழி அந்த உருவத்தில் இல்லாதது வெளிப்படையாகவே தெரிந்தது. இதுகுறித்து வைரலான நிலையில், அது ரஜினி நடித்த காட்சிதான் என சன் பிக்சர்ஸ் அந்த மேக்கிங் வீடியோவை வெளியிட்டது.

- Advertisement -

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியதாவது, ரஜினி இதுவரை டூப் போடாமல் நடித்தது இல்லை. இனிமேல் டூப் போடாமல் நடிக்க போவதும் இல்லை. வயோதிக காலத்தில் இது தவிர்க்க முடியாதது. இது ஒரு சாதாரணமான விஷயம்தான். ஊர்க்காவலன் என்ற படத்துக்காக மும்பையில் ஷூட்டிங் நடந்துள்ளது. அப்போது ரஜினி 12 நாட்கள் கால்ஷீட் தந்திருக்கிறார். இது அந்த படத்தின் இயக்குனர், நடிகர் மனோபாலா சொன்ன தகவல்தான் இது.

அப்போது சண்டை காட்சியில் குதிரையில் வருவது போல் நடிக்க ரஜினி மறுத்துவிட்டார். மாவீரன் படத்தில் நடித்த போது குதிரை என்னை கவிழ்த்து விட்டது எனக் கூறி அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் 11 நாட்கள் டூப் நடிகரை வைத்து எடுத்துவிட்டு, 12வது நாளில் 4 மணி நேரம் மட்டுமே ரஜினியை குளோசப் ஷாட் எடுத்து அந்த காட்சியை முடித்தோம் என்று மனோபாலாவே சொன்ன தகவலை ஜெ பிஸ்மி வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்