- Advertisement -
Homeபொழுதுபோக்குஷங்கர் இயக்கும் வேள்பாரி படததில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் தமிழ் ஹீரோ… - அப்போ தரமான...

ஷங்கர் இயக்கும் வேள்பாரி படததில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் தமிழ் ஹீரோ… – அப்போ தரமான சம்பவம் ரசிகர்களுக்கு காத்திருக்குது…

- Advertisement -

கடந்த 1990களில் பிரமாண்ட இயக்குனர் என்று தமிழ் சினிமாவில் பெயர் எடுத்தவர் இயக்குனர் ஷங்கர். ஜெண்டில் மேன் காதலன் முதல்வன் அந்நியன் இந்தியன் எந்திரன் சிவாஜி என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிறைய பிரமாண்ட படங்களை தந்து அசத்தியவர். ஷங்கர் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் அவரது பிரமாண்டம்தான் நினைவுக்கு வரும். இந்திய அளவில் கவனம் பெற்ற ஒரு டைரக்டர் ஷங்கர் என்றால் அது மிகையல்ல.

ஆரம்பத்தில் நடிகர் விஜயின் தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பிறகு இயக்குனராக மாறினார். அவர் இயக்கிய முதல் படம் ஜெண்டில்மேன். அர்ஜூன் நடித்த இந்த படத்தை கேடி குஞ்சுமோன் தயாரித்து இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை இயக்குனர் ஷங்கருக்கு தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்தது.

- Advertisement -

தொடர்ந்து காதலன் இந்தியன் அந்நியன் முதல்வன் என பல வெற்றிப் படங்களை ஷங்கர் கொடுத்தார். இதுவரை 30 ஆண்டுகளில் ஷங்கர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை 15 தான் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம்சேஞ்சர் என 2 படங்களும் படுதோல்வியடைந்தன.

இதைத் தொடர்ந்து கமல் நடிப்பில் இந்தியன் 3 படம் ரிலீஸாக உள்ளது. ஆனால் இன்னும் ஒரு மாத படப்பிடிப்பு இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. கமல்ஹாசன் கால்ஷீட் தந்தால்தான் இந்தியன் 3 ஷூட்டிங் முடிவடையும். ஆனால் இன்னும் அவர் கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார். சம்பள பிரச்னை காரணமாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

இதற்கிடையே மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற வரலாற்று நாவலை இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் பாகுபலி போன்று ஒரு பிரமாண்ட படைப்பாக அதை தர ஷங்கர் முடிவு செய்திருக்கிறார். இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

மும்பையை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் பென்மீடியா நிறுவனம் தான் வேள்பாரி படத்தை ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்துள்ளது. இந்த படத்தில் பிரதான கேரக்டர்களில் தமிழ் நடிகர் சியான் விக்ரம் இந்தி நடிகர் ரன்பீர் சிங் ஆகியோர் நடிக்க கமிட் செய்யப்பட்டு உள்ளனர். இப்போது நடிகர் தனுஷ் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்