- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்கிட்ட வேற வண்டி இல்ல... அதனாலதான் இப்படி செஞ்சேன்... கலங்கிய விஷால்... இது உலக மகா...

என்கிட்ட வேற வண்டி இல்ல… அதனாலதான் இப்படி செஞ்சேன்… கலங்கிய விஷால்… இது உலக மகா நடிப்புடா சாமி என ரசிகர்கள் கமெண்ட்…

- Advertisement -

நடிகர் விஷால் தற்போது ரத்னம் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதற்கு முன்னதாக அவர் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். தொடர் தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த விஷாலுக்கு, இந்தத் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அது மட்டும் இல்லாமல் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இந்த சமயத்தில்தான் அவர் இயக்குனர் ஹரியுடன் இணைந்தார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். வழக்கம் போல பக்கா கமர்சியலாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ரத்னம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியானது. அதைப் பார்க்கையில், கதாநாயகியை மையப்படுத்தியே இந்த திரைப்படம் இருக்கும் என்று தெரிகிறது. இது போக, ஆந்திர மாநிலத்தை தொடர்பு படுத்தியும் காட்சிகள் வருகின்றன.

இந்த திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஷால், தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று தெரிவித்தார்.

- Advertisement -

ஏற்கனவே இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் அவர் விஜயை பின்பற்றியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பலரும் கூறினர். அதற்கு ஏற்றார் போலவே விஷாலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். விஜயை அப்படியே அவர் காப்பி செய்வதாகவும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இது உண்மை என்பது போல, சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவின் போது சைக்கிளில் வந்தார் விஷால்.

இந்த காட்சிகள் இணையத்தில் வெளியானாலும், அது ஒன்றும் அந்தளவிற்கு பரபரப்பாக பேசவில்லை. சொல்லப்போனால் விஷாலை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில், தான் சைக்கிளில் வந்தது பற்றி விஷால் விளக்கம் அளித்துள்ளார். விஜய் மாதிரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் சைக்கிள் வரவில்லை. என்னிடம் வேறு வண்டி இல்லை அதனால்தான் சைக்கிளில் வந்தேன். பெற்றோருக்கு மட்டும் ஒரு வண்டி இருக்கிறது. மீதம் அனைத்தையும் விற்று விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். இவரின் இந்த கருத்தைக் கேட்டுவிட்டு, எங்கள் காதுகள் பாவம் இல்லையா என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்