- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஜேசன் சஞ்சய் ஹீரோ ஆகிறாரா? பிரபல தயாரிப்பாளருடன் திடீர் சந்திப்பு - அடுத்த...

இயக்குனர் ஜேசன் சஞ்சய் ஹீரோ ஆகிறாரா? பிரபல தயாரிப்பாளருடன் திடீர் சந்திப்பு – அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் புரட்சி இயக்குனராக கொடிகட்டி பறந்தவர் எஸ்ஏ சந்திரசேகர். சட்டம் ஒழுங்கு நீதி அரசியல் சார்ந்த கதைக்களங்களில் சமூக அவலங்களை சுட்டிக்காட்டி புரட்சிகரமான கருத்துகளை சொன்ன படங்களை இயக்கி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர். இப்போது நடிகராக மாறி சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஒரு கட்டத்தில் தனது மகன் விஜயை அவர் ஹீரோவாக்கி நாளைய தீர்ப்பு என்ற படத்தை இயக்கினார். தொடர்ந்து நடிகர் விஜய் முன்னணி நட்சத்திர நடிகராக மாறி உச்சம் தொட்டார். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

- Advertisement -

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தனது அப்பா விஜயை போல சினிமாவில் ஹீரோ ஆகவில்லை. மாறாக தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் போல திரைப்பட இயக்குனராக தமிழ் சினிமா களத்தில் குதித்தார். அவர் இயக்கத்தில் உருவான முதல் படம் சிம்கா. தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ஆக்சன் கதைக்களத்தில் பட்டைய கிளப்பும் ஒரு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சிம்கா படத்தின் பிரிவ்யூ ஷோ பார்த்த லைகா புரடக்சன்ஸ் தரப்பினர் மீண்டும் ஒரு படத்தை இயக்க ஜேசன் சஞ்சயிடம் பேசியதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

- Advertisement -

ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்டே நாலு மாசம் தூங்க மாட்டே என்ற பாடல் காட்சியில் விஜயுடன் நடனம் ஆடியவர்தான் ஜேசன் சஞ்சய். இப்போது அவர் இயக்கிய சிம்கா படத்திலும் ஒரு பாடல் காட்சியில் நடிகை கேத்தரின் தெரசாவுடன் அவர் குத்தாட்டம் போட்டிருக்கிறார். இதற்கிடையே துபாய் தொழிலதிபர் மற்றும் டிடிடி படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவியுடன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் நேரில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இருவரும் அடுத்த படம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அடுத்து கண்ணன் ரவி தயாரிக்கும் புதிய படத்தில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கலாம் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. அல்லது கண்ணன் ரவி தயாரிக்கும் படத்தை ஜேசன் சஞ்சய் டைரக்ட் செய்யவும் வாய்ப்புள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

- Advertisement -

சற்று முன்