தமிழ் சினிமாவில் கடந்த 1990 காலகட்டத்தில் நிறைய வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் சரத்குமார். அவரது கம்பீரமான தோற்றமும் நடிப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. அவர் மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் வென்றவர் என்பது கோலிவுட் சார்ந்த பலருக்கும் தெரியாது. அந்தளவுக்கு அவர் கட்டுக்கோப்பான உடல்கட்டுடன் இருந்தவர்.
நடிகர் சரத்குமார் ஆரம்பத்தில் கண் சிமிட்டும் நேரம் புரியாத புதிர் போன்ற சில படங்களை தயாரித்து சிறு சிறு வேடங்களில் அந்த படங்களில் நடித்திருந்தார். பிறகு புலன் விசாரணை படத்தில் பம்பாய் டாக்டர் வில்லன் கேரக்டரில் அவரை அறிமுகம் செய்தவர் கேப்டன் விஜயகாந்த் தான். பிறகு கேப்டன் பிரபாகரன் படத்தில் தனது நண்பராக நடிக்க வைத்தார்.
அதன்பிறகு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சேரன் பாண்டியன் படத்தில் சரத்குமார் ஹீரோவாக மாறினார். தொடர்ந்து 1990களில் நாட்டாமை நட்புக்காக சூரியன் சூரியவம்சம் என பல வெற்றிப் பட்ஙகளை கொடுத்த சரத்குமார் இப்போது கடந்த 10 15 ஆண்டுகளாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சூரியவம்சம் படத்தில் நடித்த போது நடிகை ராதிகாவுடன் ஏற்பட்ட நட்பு காதலாகி மாறி இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி மற்றும் மகள்களும் சென்னையில் இருக்கின்றனர். வணங்கான் படத்தில் சாயாதேவி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சரத்குமார் கூறியதாவது, நான் 14 ஆயிரம் சதுர அடியில் ஒரு வீட்டைக் கட்டினேன். அப்படி ஒரு வீடு கட்டணும்ன்னு எனக்கு ரொம்ப நாளாக ஆசை. அதைப்பற்றி வீடியோ எடுத்து போடுறாங்க. அதில் சொல்றாங்க, நான் 500 கோடிக்கு இந்த வீட்டை கட்டியிருக்கேன் என்று.
இவங்க சொல்றதை கேட்டுட்டு 500 கோடி ரூபாய்க்கு என்ன வச்சிருக்கான்னு இன்கம்டேக்ஸ் ரெய்டு வந்துடுவாங்க போல. 500 கோடி ரூபாய் இருந்தால் நான் ஏன் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறேன்? பேங்க்குல அந்த பணத்தை போட்டுட்டு அதில் வர்ற வட்டியிலேயே நான் வாழ்ந்திடுவேன் என்று நடிகர் சரத்குமார் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





