- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் உண்மைகளை பேச ஆரம்பித்தால், பலரது வாழ்வில் அது புயலை கிளப்பிவிடும் என்பதால் அமைதி காக்கிறேன்...

நான் உண்மைகளை பேச ஆரம்பித்தால், பலரது வாழ்வில் அது புயலை கிளப்பிவிடும் என்பதால் அமைதி காக்கிறேன் – அமீர் விடுத்த எச்சரிக்கை

- Advertisement -

நடிகர் அமீர், சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். என் மீதான அவதூறான கருத்துகளை, உண்மையான புறம்பான விஷயங்களை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறிவரும் நிலையில், என்னிடம் பதில் கேட்கும் சமூக ஊடகத்துறை நண்பர்களுக்காக இந்த அறிக்கையை வெளியிடுவதாக அமீர் அதில் குறிப்பிட்டு, அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

பருத்திவீரன் குறித்த வழக்கு கோர்ட்டில் நடந்துவருவதால், இதுபற்றி பேசுவதை தவிர்க்கிறேன். இதற்கு வேறு காரணம் எதுவுமில்லை, எனினும் சில விளக்கங்களை அளிக்கிறேன். பருத்தி வீரன் குறித்தும், என்னை குறித்தும் ஞானவேல் ராஜா கூறியதும் சிறிதும் உண்மை இல்லை. எனது கண்ணியத்தை குறைக்கவும், திரைப்பயணத்தில் எனக்கு தடை ஏற்படுத்தவும் செய்யப்படும் பொய் பிரசாரம் இது.

- Advertisement -

பருத்திவீரன் படத்துக்காக எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை என்பதே உண்மை. இல்லாத அந்த ஒப்பந்தத்தை நான் மீறவும் இல்லை. முதல்கட்ட படப்பிடிப்புக்கு மட்டுமே பணம் தந்த ஞானவேல்ராஜா, பிறகு படத்தை பாதியில் நிறுத்திவிட்டு காணாமல் போய்விட்டார் என்பதுதான் உண்மை.

அதன்பிறகு எனது ‘டீம் ஒர்க் புரடக்சன் ஹவுஸ்’ மூலமே, படத்தை எடுத்து முடித்தேன். அப்போது என்னுடன் இருந்த படப்பிடிப்புக்குழு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இது நன்றாக தெரியும். 17 ஆண்டுகளுக்கு முன், என் கை பிடித்து கேட்டவரின் அன்பான வார்த்தைக்கு கட்டுப்பட்டு வேலை செய்தவன், இன்று குற்றவாளியாக நிற்கிறேன்.

- Advertisement -

நடந்த உண்மைகளை சொல்ல எனக்கு சில மணி நேரம் கூட ஆகாது. ஆனால், அது பலரது வாழ்க்கையில் புயலை கிளப்பிவிடும், ஒட்டுமொத்த திரையுலகையே திசை திருப்பிவிடும் என்பதால், அமைதியாக இருக்கிறேன். நான் அமைதியாக இருப்பதற்கு இது மட்டுமே காரணம். வேறு காரணங்கள் எதுவும் இல்லை.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னைப் பற்றிய கூறிய விஷயங்களால் என்னை விட என் குடும்பத்தினர் மிகவும் மனஉளைச்சலில் தவிக்கின்றனர். ஆனாலும் நானும் என் குடும்பத்தாரும் இதை கடந்து வந்துவிடுவோம். அவரது சூழ்ச்சிக்கு நாங்கள் பலி ஆக மாட்டோம். அவரை வழிநடத்தும் பெரியவர்கள், இதுபோல் அவதூறாக பொதுவெளியில் யாரையும் பேச மாட்டோம் என்று சொல்லிக்கொடுங்கள் என, அன்போடு கேட்டுக்கொள்வதாக அமீர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்