- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்கள் சண்டையை பார்த்து அப்படி ஒரு பகீர் முடிவுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்… அப்போது கமல்...

ரசிகர்கள் சண்டையை பார்த்து அப்படி ஒரு பகீர் முடிவுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்… அப்போது கமல் சொன்ன அறிவுரை – இப்படி ஒரு சம்பவமும் நடந்ததா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி போல அடுத்த வரிசையில் உச்சரிக்கப்படும் பெயர்கள் ரஜினி கமல் தான். இன்று வரை அந்த பெயர்கள் மாறவில்லை. ஏனெனில் இன்றும் தமிழ் சினிமாவில் இரு பெரும் சிகரங்களாக உச்ச நட்சத்திர நடிகர்களாக ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருந்து வருகின்றனர். அவர் சூப்பர் ஸ்டார் இவர் உலக நாயகன் என்று புகழப்படுகின்றனர்.

ஆரம்பத்தில் ரஜினி கமல் இருவரும் இணைந்து பல படங்களில் ஒன்றாக நடித்தனர். இதில் சில படங்களில் கமலுக்கு வில்லனாக நடித்தவர் தான் ரஜினிகாந்த். மற்ற சில படங்களில் கமலின் நண்பராகவும் ரஜினி நடித்திருந்தார். ரஜினி கமல் இணைந்து நடித்த பல படங்கள் அன்று வெள்ளிவிழா கொண்டாடிய வெற்றிப் படங்களாக இருந்தன.

அவர்கள் இருவரும் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படம் 1979ம் ஆண்டில் வெளியானது. அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இனி தனிப்பட்ட வளர்ச்சிக்காக இருவரும் தனித்தனியாக தமிழ் சினிமாவில் பயணிப்போம் என்று முடிவு செய்தனர். இன்று அவர்கள் தமிழ் சினிமாவில் அடையாளங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றனர் என்றால் அது மிகையல்ல.

கடந்த 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி கமல் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிமுக பிரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி காட்டுத்தீ போல இணையத்தில் வைரலானது. ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் ரூ. 1000 கோடி வசூலை தொட்டதில்லை. ஆனால் இந்த படம் ரூ. 1000 கோடி வசூலை அசால்ட்டாக அள்ளும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, எங்களுக்காக அடிச்சுக்கிற ரசிகர்களுக்கு எல்லாம் நாங்கள் பழகுவதை பார்த்தால் வேடிக்கையாக விசித்திரமாக இருக்கும்.

ஒருமுறை ரஜினிகாந்த் என்கிட்ட வந்து, நான் சினிமாவை விட்டே போகப் போகிறேன். நம்ம ரெண்டு பேரோட ரசிகர்களும் சண்டை போட்டுட்டு இருக்காங்க என்று சொன்னார். அப்போது நான் அவர்கிட்ட சொன்னேன், நீங்க சினிமாவை விட்டு போயிட்டால் என்னையும் போகச் சொல்லிடுவாங்க. அப்படியெல்லாம் முடிவு எடுக்காதீங்க. இதெல்லாம் சின்ன புள்ளைங்க சண்டை மாதிரின்னு சொன்னேன். அப்புறம்தான் அந்த முடிவை மாத்திக்கிட்டார் என்று கமல்ஹாசன் அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்