- Advertisement -
Homeபொழுதுபோக்குகாந்தாரா பெண் தெய்வத்தை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு… கர்நாடகா நீதிமன்றம்...

காந்தாரா பெண் தெய்வத்தை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு… கர்நாடகா நீதிமன்றம் போன்ற அதிரடி உத்தரவு!

- Advertisement -

காந்தாரா படம் அபார வெற்றி பெற்றதை அடுத்து கடந்தாண்டில் காந்தாரா சாப்டர் 1 படம் வெளியானது. இந்த படத்திலும் ரிஷப் ஷெட்டி மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கடவுள் பக்தியை மையப்படுத்திய இந்த கதையில் நடிகர் ஜெயராம் நடிகை ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கோவாவில் 55வது சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இந்த விழாவில் காந்தாரா படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர் நடிகைகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய பலர் காந்தாரா சாப்டர் 1 படம் குறித்து பாராட்டி மேடையில் பேசினர்.

- Advertisement -

அப்போது காந்தாரா படத்தில் குறிப்பிட்ட பெண் தெய்வம் ரிஷப் ஷெட்டி உடலுக்குள் செல்லும்போது அவர் வெளிப்படுத்திய நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்ததாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கூறி பாராட்டினார். மேலும் அதுபோலவே அவர் மேடையில் நடித்தும் காட்டினார். இது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது.

இது ரிஷப் ஷெட்டியின் நடிப்பை கிண்டல் செய்யும் விதமாக இருந்ததாகவும் பெண் தெய்வத்திற்கும் பேய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றும் இந்த செயல் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் பல்வேறு தரப்பிலிருந்தும் பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

- Advertisement -

ஆனால் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும் தவறாக புரிந்து கொண்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ரன்வீர் சிங்குக்கு எதிராக அளித்த புகாரில் அவருக்கு எதிராக பல பிரிவுகளில் வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இதுகுறித்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இன்று நடந்த இந்த விசாரணையின் போது, இந்த விவகாரத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் ரன்வீர் சிங் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அந்த மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் பிரதிவாதிகளின் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு அடுத்த விசாரணையை வருகிற மார்ச் 2ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்