தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டில் லேசா லேசா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் திரிஷா. 23 ஆண்டுகளாக முன்னணி நாயகியாக உள்ள நடிகை திரிஷாவுக்கு இப்போது 43 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. சமீபத்தில் சென்னையில் நடந்த தயாரிப்பாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் தவெக தலைவர் நடிகர் விஜயும் நடிகை திரிஷாவும் ஜோடியாக வந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தற்போது ஒரு தகவல் காட்டுத்தீ போல இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை திரிஷாவுக்கும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது அவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது. அப்போது விலை உயர்ந்த வைரமோதிரம் ஒன்றை திரிஷாவுக்கு வருண்மணியன் பரிசளித்தார்.
ஆனால் இந்த திருமணம் நடக்கவில்லை. திருமணத்தை நடக்க விடாமல் தடுத்து நிறுத்தியதே திரிஷா தான் தகவல் பரவியது. அப்போது தனது திருமணம் குறித்து டிவீட் செய்த திரிஷா, என் திருமணம் நிச்சயதார்த்தத்துடன் தடைபட்டு நின்று விட்டது. இதுகுறித்து பல கணிப்புகள் வலம் வருவதைப் பார்த்து வியப்பாக உள்ளது. நான் ஹேப்பியாக சிங்கிளாக இருக்கிறேன் என்று அந்த டிவீட்டில் பதிவு செய்திருந்தார்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என்று வருண் மணியன் கூறியதாகவும், திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக மாட்டேன் என்று திரிஷா கூறியதாகவும் ஒரு தகவல் அப்போது வேகமாக பரவியது. இந்த சூழ்நிலையில் அப்போது ஒரு நேர்காணலில் பேசிய நடிகை திரிஷா கூறியதாவது, நான் திருமணம் செய்து கொள்வதாக இருந்த நபர் நடிப்பை கைவிடுமாறு என்னிடம் சொன்னார். படங்களில் நடிப்பதை நிறுத்துவதற்கு பதிலாக நான் திருமணத்தை நிறுத்திவிட்டேன்.
நான் கர்ப்பமானால் மட்டுமே நடிப்பிலிருந்து பிரேக் எடுப்பேன். எனக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்காவிட்டால் என் இமேஜூக்கு ஏற்ற கேரக்டர்களில் நடிப்பேனே தவிர சினிமாவை விட்டுப் ஒரு போதும் நான் போக மாட்டேன். உயிர் உள்ள வரை படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை என்றும் திரிஷா கூறியிருந்தார்.
சினிமா மீதான காதலால் நடிகை திரிஷா வீடியோ கேமராவை தன் முதுகில் பச்சை குத்தி இருக்கிறார். சினிமாவில் நடிகை ஆனதிலிருந்து பிரேக் எடுக்காமல் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என படங்களில் திரிஷா தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் பக்கமும் திரிஷா சென்று வந்தார். கடந்த 23 ஆண்டுகளாக திரைப்படங்களில் கதாநாயகியாகவே நடித்துக் கொண்டிருக்கும் திரிஷா, விஜய் விவகாரத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருவதும் குறிப்பிடத்கக்து.





