கடந்த டிசம்பர் மாதம் அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் சிறை. இந்த படத்தில் விக்ரம் பிரபு அக்சய் குமார் அனுஷ்மா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதையை டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் எழுதியிருந்தார். இந்த படம் 75 நாட்களை கடந்து இன்னும் சில தியேட்டர்களில் ஓடுது குறிப்பிடத்தக்கது.
சிறை படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டு பேசியதாவது, பெரிய ஸ்டார் பவர் இல்லாத ஒரு கதையை மட்டும் நம்பிய படம் திரையரங்குகளில் வெளியாகி இவ்வளவு பெரிய வெற்றியை பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல.
நன் சிறை படம் பார்த்த பிறகு படம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் அதையும் தாண்டி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ஒரு பெரிய கமர்சியல் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இருக்கும் உண்மை அதில் உள்ள உணர்வு எல்லோரிடமும் பொதுவாக சென்றடைந்ததால் தான் இந்த வெற்றி கிடைத்து இருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு படத்தை உருவாக்கிய இயக்குனரின் முயற்சி மிகவும் சிறப்பானது. இது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட உண்மை கதை. ஒரு சம்பவத்தை திரைக்கதையாக மாற்றி ஒரு முழுமையான திரைப்படமாக உருவாக்குவது என்பது சுலபமான விஷயம் அல்ல. அந்தப் பயணத்தில் பல சவால்கள் இருந்திருக்கும். ஆனால் அதை நம்பிக்கையுடன் உறுதியுடனும் செய்து படக்குழு ஜெயித்திருக்கிறார்கள்.
அதனால் தான் சிறை படம் இவ்வளவு சிறப்பான படமாக வெளியானது. படத்தின் ஒவ்வொரு காட்சியில் இருக்கும் அழகும் நுட்பமும் வெளிப்படுகிறது. இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணி செய்திருக்கின்றனர். இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக்கொண்டது மிகவும் சிறப்பான விஷயம். தமிழ் சினிமாவின் மெயின்ஸ்ட்ரீம் ரசிகர்கள் மிகவும் மிகுந்த ரசனை உடையவர்கள்.
இந்த மாதிரியான ஒரு முயற்சி வேறு மொழியில் எடுக்கப்பட்டு இருந்தால் இது போன்ற வெற்றியை சிறை படம் அடைந்திருக்குமா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் தமிழில் அது சாத்தியமாகியுள்ளது. வெற்றி கிடைக்கும் போது இதற்கு நான்தான் காரணம் என்று சொல்வது எளிது. ஆனால் எங்கும் அப்படி சொல்லாமல் ஒருவருக்கொருவர் கௌரவம் அளித்திருப்பது மிகவும் நல்ல விஷயம் என்று இயக்குனர் வெற்றிமாறன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





