- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் தணிக்கை 2வது முறையாக ரத்து… தேர்தலுக்கு பிறகாவது படம் ரிலீஸ் ஆகுமா? -...

ஜனநாயகன் படம் தணிக்கை 2வது முறையாக ரத்து… தேர்தலுக்கு பிறகாவது படம் ரிலீஸ் ஆகுமா? – அப்செட்டில் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்த படம் சென்சார் பிரச்சனை காரணமாக இதுவரை 2 மாதங்கள் கடந்தும் ரிலீஸ் செய்யப்படவில்லை.

நடிகர் விஜயுடன் பூஜா ஹெக்டே மமீதா பைஜூ பிரியாமணி பாபி தியோல் கௌதம் மேனன் நரேன் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் எப்போது திரைக்கு வரும் என்பதில் தொடர்ந்து குழப்பமும் சந்தேகமும் நீடிக்கிறது. கடைசி நேரத்தில் சென்சாரில் சிக்கிய இந்த படம் கோர்ட் வரை சென்ற நிலையிலும் படம் ரிலீஸ் ஆகவில்லை.

- Advertisement -

ஒரு கட்டத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டில் வழக்கை வாபஸ் பெற்றது. இதையடுத்து கடந்த மார்ச் 9ம் தேதி சென்னையில் ஜனநாயகன் படத்தின் மறு தணிக்கை நடப்பதாக இருந்தது. ஆனால் சென்சார் போர்டு குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அன்று காட்சி திரையிடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட அந்தக் காட்சி மறு தணிக்கை நேற்று சென்னையில் நடப்பதாக தகவல் வெளியானது. ஆனால் மறு தணிக்கை நடக்கவில்லை. மும்பை அல்லது ஆந்திராவில் இருந்து சிறப்பு தணிக்கை குழுவினர் படத்தை பார்ப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் பட குழுவுக்கு சென்சார் தரப்பிலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

- Advertisement -

தற்போதைய சூழலில் ஜனநாயகன் படம் எப்போது மறு தணிக்கைக்கு வரும் என்பதே தெரியவில்லை. ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால் இந்த படம் சென்சார் செய்யப்பட்டாலும் இப்போதைக்கு ரிலீஸ் இல்லை என்பது உறுதியாகி விட்டது. மே 4ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்புதான் ஜனநாயகன் படம் திரைக்கு வரும் வாய்ப்புள்ளது.

ஆனால் ஜனநாயகன் படத்தை மறு தணிக்கை செய்வதற்கே இப்படி மாதக்கணக்கில் தணிக்கை வாரியம் அதிகாரிகள் குழு தரப்பில் தாமதம் செய்வதால் ஜனநாயகன் படம் ரிலீஸ் எப்போது என்பதை விட அந்த படத்தின் தணிக்கை எப்போது என்பதே கேள்விக்குறியாக மாறி உள்ளது. இது தளபதி ரசிகர்களை அப்செட் செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்