விஜய் கடைசியாக நடித்த பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றன. குறிப்பாக வாரிசு படம் துணிவு படத்துக்கு போட்டியாக களம் இறக்கப்பட்டது. ஆனால் கண்டெட்ண்ட் ரீதியாக துணிவு படமே இந்தாண்டு பொங்கல் ரேசில் வென்றது. இதன் காரணமாக விஜய் பெரும் அப்செட்டில் இருப்பதாக கோலிவுட்டில் பேச ஆரம்பித்தனர்.
எனவே தனது அடுத்த படத்தை மெகா ஹிட் ஆக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார் விஜய். அந்த வகையில் மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்து இருக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைப்பில் படம் உருவாகி இருக்கிறது.
இதில் விஜய்யுடன் மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், சஞ்சய்தத், அர்ஜுன், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர் விஜய் பிறந்தநாளை ஒட்டி ஃபர்ஸ்ட் சிங்களும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரி, கலந்து ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. பாடல் பெரும் வரவேற்பு பெற்றாலும் வரிகளுக்காக சர்ச்சையை சந்தித்தது.
இந்த சூழலில் சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூலை 29ஆம் தேதி முதல் க்ளிம்ப்ஸ் வெளியானது. ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தை அவர் ஏற்றிருக்கிறார்.அதேபோல் அர்ஜுன் பிறந்த நாள் ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. அர்ஜுன் இதில் ஹரோல்டு தாஸ் என்ற கதாபாத்திரத்தை ஏற்று இருக்கிறார்.
படத்தின் பேட்ச் ஒர்க் பாக்கி இருப்பதால் லோகேஷ் கனகராஜ் காஷ்மீர் சென்று இருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என்று எதிர்பார்ப்பு எல்லோரிடமும் எழ ஆரம்பித்தது. படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒரு ஊரில் நடத்தலாம் என விஜய் திட்டமிட்டு இருந்ததாக படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்தனர். ஆனால் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை லியோ ஆடியோ விழா கொடுத்த எந்த அப்டேட்டும் எந்த தகவலும் வெளியாகாமல் இருந்து வருகிறது
இதற்கிடையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த விஜய் திட்டமிட்டதாகவும்; மலேசியாவில் லியோ படத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கும் நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறாங்க விஜய் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிகிறது .
முதலில் செப்டம்பர் 30ஆம் தேதி படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறும் என்று கூறப்பட்ட சூழலில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் ஐந்தாம் தேதி மலேசியாவில் ஆடியோ லான்ச் நடைபெற வாய்ப்புகள் அதிகம் என பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதே சமயம் தமிழ்நாட்டில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியை வைப்பதற்கான ப்ளானில் படக்குழு இருக்கிறதாம்





