- Advertisement -
Homeபொழுதுபோக்குநகைச்சுவையில் கலக்கும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி பட டீசர்... ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செஞ்சிருக்காங்க......

நகைச்சுவையில் கலக்கும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி பட டீசர்… ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செஞ்சிருக்காங்க… அப்படின்னா இது சசிக்குமாரோட 2ஆவது இன்னிங்ஸ்தான் போங்க….

- Advertisement -

சுப்பிரமணியபுரம் எனும் ஒரே ஒரு திரைப்படம் போதும் சசிகுமார் இங்கு யார் என்பதை ரசிகர்கள் உணர்ந்திருக்க. 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை கொண்டாடாத ஆட்களே இருக்க முடியாது என்று கூறலாம். மதுரையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படம் தான் சுப்ரமணியபுரம்.

 

- Advertisement -

சொல்லப் போனால் அது ஒரு டெம்ப்லேட் திரைப்படம். சுப்பிரமணியபுரம் வெளியான பிறகு தான் அதே கதை அம்சம் கொண்ட ஏராளமான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்டன. குறிப்பாக மதுரையை மையமாக வைத்து படங்களை இயக்குனர்கள் களமிறக்கினார்கள். இதன்பிறகு சசிகுமார் ஈசன் எனும் திரைப்படத்தை மட்டும் இயக்கினார்.

 

- Advertisement -

இதன் பிறகு இயக்கத்தில் இருந்து வெளியேறிய அவர், முழுக்க முழுக்க நடிப்பின் பக்கம் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இதில் அவர் நடித்த நாடோடிகள், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றன. சொல்லப்போனால் நடிகராகவும் இந்த திரைப்படத்தில் தனது அந்தஸ்தை அவர் உயர்த்திக்கொண்டார்.

 

ஆனால் இதன் பிறகு சசிகுமாருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எந்த ஒரு திரைப்படங்களுமே அமையவில்லை. சில காலங்கள் கிராமத்து சம்பந்தமான திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், பிறகு நகர திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இது எதுவுமே சசிகுமாருக்கு கை கொடுக்கவில்லை. தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்துமே பிளாப் ஆகின.

 

இப்படியான சூழலில்தான் அயோத்தி திரைப்படம் சசிகுமாருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. மந்திரமூர்த்தி இயக்கிய இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் சசிக்குமார் மீது சினிமா பார்வை திரும்பியுள்ளது. தற்போது அவர் டூரிஸ்ட் ஃபேமிலி என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

 

அபிசன் ஜீவித் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் சிம்ரன் யோகி பாபு மிதுன் ஜெய்சங்கர் ரமேஷ் திலக் எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இதன் டீசர் தற்போது வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இலங்கைத் தமிழில் பேசும் சசிகுமாரின் பேமிலி, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திட்டமிடுவது போலவும், அப்போது நடைபெறும் நகைச்சுவை கலந்துரையாடலையும் இந்த டீசர் மையப்படுத்தி இருக்கிறது. இதற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்