- Advertisement -
Homeபொழுதுபோக்குதிமுகவில் என்னை சேர்த்துக்குங்க… நான் தமிழ்நாட்டில் வாழ வாய்ப்பு கொடுங்க - முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை...

திமுகவில் என்னை சேர்த்துக்குங்க… நான் தமிழ்நாட்டில் வாழ வாய்ப்பு கொடுங்க – முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த விஜய் பட நடிகை!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. அந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகவும், விஜய்க்கு தங்கையாகவும் அவர் நடித்திருந்தார். மேலும் எஸ் மேடம் பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

இதற்கிடையே நாம் தமிழர் கட்சி சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி சீமான் ஏமாற்றி விட்டதாகவும் அவர் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சினிமாவில் நடிக்க வாய்ப்பின்றி பெங்களூருவில் மிகவும் கஷ்டப்படுவதாகவும் அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, என் தாய்மொழி தமிழ். அதனால் தமிழகத்தில் என் மக்களுடன் என்னை வாழ விடுங்கள். நான் யாரிடமும் காசு பணம் கேட்கவில்லை. வீடு கொடுங்க பங்களா குடுங்க என்று நான் கேட்டது கிடையாது.

பெங்களூருவில் எனக்கு யாரும் இல்லை. இதை மீண்டும் உறுதி செய்து கொள்கிறேன். என் அக்கா எழுந்து நடக்க முடியாமல் ஐந்து ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார். என்னை மோசமான பெண் என்கிறார்கள். எந்த ஒரு மோசமான பெண்ணும் இப்படி இருக்க மாட்டாள். படுத்த படுக்கையாக இருக்கும் அக்காவை வைத்துக்கொண்டு தினமும் 6 மணிக்கு எழுந்து அவர்களை குளிக்க வைத்து சாப்பாடு கொடுத்து வீட்டை பார்த்துக் கொள்கிறேன்.

- Advertisement -

கடந்த ஐந்து ஆண்டுகளாக பெங்களூருவில் சிறையில் வாழ்வது போல வாழ்கிறேன். இதை நான் ஒரு விண்ணப்பமாக முன்வைத்து தமிழ்நாட்டில் வாழவிடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். அவ பாட்டுக்கு சென்னைக்கு வந்து வீடு எடுக்கலாமே என்று சிலர் கேட்கலாம். எனக்கு வீடு கொடுக்க மாட்டார்கள். எனக்கு வீடு கொடுப்பவர்களை மிரட்டுவார்கள்.

அக்காவுக்கும் எனக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் சாரிடம் சொல்லி அங்கு வாழ வைக்கணும். திமுகவில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். தமிழகத்தில் பயமில்லாமல் வாழ விரும்புகிறேன். பெங்களூருவில் அனாதை மாதிரி வாழ்கிறேன். இந்த வாழ்க்கையை தொடர முடியவில்லை. மற்றவர்களைப் போல சந்தோஷமாக வாழ விரும்புகிறேன் என்று அந்த வீடியோவில் நடிகை விஜயலட்சுமி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்