- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியை ஏமாற்றிய அந்த பாடல் - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை வெளிப்படையாக சொன்ன நடிகை...

ரஜினியை ஏமாற்றிய அந்த பாடல் – ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை வெளிப்படையாக சொன்ன நடிகை அம்பிகா!

- Advertisement -

கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த இரட்டை சகோதரிகள் யார் என்றால் அது அம்பிகாவும் ராதாவும்தான். இருவரும் மாறி மாறி ரஜினி கமல் மோகன் பிரபு கார்த்திக் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருந்தனர். குறிப்பாக அம்பிகாவுக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தது.

இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் படிக்காதவன். நாயகியாக அம்பிகா நடித்திருந்தார். இந்த படத்தில் சிவாஜி கணேசன் பிரதான கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் வடிவுக்கரசி நாகேஷ் பூர்ணம் விஸ்வநாதன் ரம்யாகிருஷ்ணன் குண்டு கல்யாணம் ஜனகராஜ் தேங்காய் சீனிவாசன் போன்றவர்களும் நடித்திருந்தனர்.

- Advertisement -

இந்த படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள்தான். அதிலும் கே ஜே ஜேசுதாஸ் பாடிய ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் பாடல் இன்றும் டிரண்டிங் இருந்து வருகிறது. அம்பிகாவின் தோள் மீது கை போட்டுக்கொண்டு நடந்துக்கொண்டே ரஜினிகாந்த் பாடும் இந்த பாடல் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற பாடலாக உள்ளது.

இந்த பாடல் குறித்து சமீபத்தில் நடிகை அம்பிகா ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது கூறியதாவது, படிக்காதவன் படத்தில் ஊரை தெரிஞ்சுகிட்டேன் பாடலில் நான் முதலில் இல்லை. நானும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். உடனே ராஜா சார் இயக்குனரிடம் சொன்னார். அவரும் அம்பிகா பாட்டில் இருந்தால் நல்லா தான் இருக்கும் என்று சொன்னார்.

- Advertisement -

அதனால் முதல் இரண்டு வரி பாடீட்டு போய்விடுவோம் என்று பார்த்தால் ஒரு இரண்டு மணி நேரம்தான் என்று முதலில் இயக்குனர் சொன்னார். அதன் பின்னர் 2 மணி நேரம் 4 மணி நேரம் ஆனது. அன்று இரவு முழுவதும் படப்பிடிப்பு நடந்தது. அந்த பாடல் முழுவதிலும் நான் இருந்தேன்.

அப்போது என்னிடம் பேசிய ரஜினி சார், ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு பாடல் தான் பெரிய ஹிட் ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஊரை தெரிஞ்சுகிட்டேன் பாடல் தான் பெரிய அளவில் ஹிட் ஆனது. அந்த பாடல் படப்பிடிப்பில் போய் நானே மாட்டிக்கொண்டேன் என்று முதலில் ஃபீல் பண்ணி இருந்தாலும், அந்தப் பாட்டை நான் பண்ணவில்லை என்றால் அது பெரிய தப்பாக போயிருக்கும் என்று நடிகை அம்பிகா அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்