- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த படங்களில் அந்த தவறுகளை நான் சரிசெய்வேன் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

அடுத்த படங்களில் அந்த தவறுகளை நான் சரிசெய்வேன் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

- Advertisement -

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கோவையை அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர். கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்த நிலையில் வங்கியில் 3 ஆண்டுகள் பணிசெய்தவர். கல்லூரியில் படித்த காலத்தில் குறும்படங்களை இயக்கியவர்.

குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு சினிமாவில் நேரடியாக களம் இறங்கி வெற்றி பெற்றவர். யாரிடமும் உதவி இயக்குனராக பணிசெய்யாமலேயே மாநகரம் கைதி விகரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை லோகேஷ் கனகராஜ் தந்த நிலையில் ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.

- Advertisement -

நட்சத்திர இயக்குனராக மாறிய அவரது இயக்கத்தில் வெளியான லியோ படம் பலத்த ஏமாற்றத்தை தந்தது. எனினும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை லோகேஷ் இயக்கிய போது, இது 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் அதிரிபுதிரி படமாக இருக்கும் என்றுதான் தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் ஒட்டுமொத்த சொதப்பல்களும் நிறைந்த படம் முழுக்க லாஜிக் மிஸ்டேக்குகளுடன் வந்த கூலி படம், ரஜினி படமாகவும் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் படமாகவும் இல்லாமல் பெரிய தோல்வியை சந்தித்தது. ரஜினி நடித்த படம் என்ற ஒரே காரணத்துக்காக அந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இதனால் லோகேஷ் கனகராஜ் கடுமையான விமர்சனங்களில் சிக்கினார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எந்த படமாக இருந்தாலும் விமர்சனங்கள் வரும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கூலி படம் குறித்த விமர்சனங்களை நான் மதிக்கிறேன். கூலி படத்துக்கு பின் வேறு வேலைகளில் நான் பிஸியாக இருந்தேன். அதனால் அதுகுறித்து எதுவும் பேசவில்லை.

என்னை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் அடுத்த படத்தில் தவறுகளை சரி செய்வேன். அதேசமயம் விமர்சனங்களை தாண்டி கூலி படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தயாரிப்பாளர் கூறினார். அந்த வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. என் அடுத்த படங்கள் குறித்து படம் தயாரிக்கும் நிறுவனங்கள் அறிவிக்கும் என்று லோகேஷ் கனகராஜ் கூறினார்.

- Advertisement -

சற்று முன்