- Advertisement -
Homeபொழுதுபோக்கு3 மாதங்களில் வெளியான தமிழ் படங்களில் எண்ணிக்கை 67 - இதில் வெற்றி வாகை சூடிய...

3 மாதங்களில் வெளியான தமிழ் படங்களில் எண்ணிக்கை 67 – இதில் வெற்றி வாகை சூடிய படங்களின் எண்ணிக்கை இவ்வளவுதானா? விரக்தியில் ரசிகர்கள்!

- Advertisement -

எப்போதுமே கதையை நம்பி படம் எடுக்காமல் ஹீரோவையும் இயக்குனரையும் இசையமைப்பாளரையும் நம்பி படம் எடுத்தால் அதன் முடிவு என்பது மிக மோசமாக தான் இருக்கும். தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நிலமை தான் நீடித்து வருகிறது. அந்த வட்டத்தை விட்டு வெளியே வர எந்த இயக்குனரும் தயாரிப்பாளரும் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் விஜய் நடித்த ஜனநாயகன். அது அரசியல் காரணங்களால் சென்சார் பிரச்னையில் சிக்கி இதுவரை திரைக்கு வரவில்லை. தேர்தலுக்கு பிறகுதான் ரிலீஸ் என்று சொல்லப்பட்டாலும் தியேட்டரில் அந்த படம் திரையிடப்படும் வரை ஜனநாயகன் படம் குறித்து எதுவும் உறுதியாக சொல்ல முடியாது.

சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் இந்த ஆண்டில்தான் கடந்த பொங்கலுக்கு வெளியானது. ஆனால் இந்த படம் விமர்சன ரீதியாக மிக மோசமான படமாக பேசப்பட்டது. ரூ. 100 கோடி வசூலித்தாலும் அதை விட அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்பதால் இது ஒரு தோல்வி படமாக தான் பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 4வது வெள்ளிக்கிழமையான இன்று வரை 3 மாதங்களில் மொத்தம் தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் எண்ணிக்கை 67. இதுதான் 3 மாதங்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை. இனி ஏப்ரல் மாதத்தில் தான் அடுத்த புதிய படங்கள் ரிலீஸாக உள்ளன.

இந்த 3 மாதங்களில் வெளியான 67 படங்களில் நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் ராதிகா சரத்குமார் நடித்த தாய்கிழவி டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நடித்த வித் லவ் மற்றும் இப்போது திரைக்கு வந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிற யூத் ஆகிய 4 படங்கள் மட்டுமே வெற்றி பெற்ற படங்களாக வரவேற்பை வசூலை ரசிகர்களிடம் பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் பராசக்தி தலைவர் தம்பி தலைமையில் தாய்கிழவி வித் லவ் மற்றும் யூத் ஆகிய படங்களில் வசூல் அடிப்படையில் இதுவரை தமிழ் சினிமா 300 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பராசக்தி தவிர்த்து வேறு எந்த படமும் ரூ. 100 கோடி வசூலை 3 மாதங்கள் கடந்தும் எட்டவில்லை என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விரக்தியை தந்துள்ளது.

சற்று முன்