- Advertisement -
Homeபொழுதுபோக்குபோரின் மொத்த சூழலும் வீட்டுக்குள் வரப்போகிறது, வெறுப்பின் கொட்டம் வீழ்க அன்பு அறமென எழுக -...

போரின் மொத்த சூழலும் வீட்டுக்குள் வரப்போகிறது, வெறுப்பின் கொட்டம் வீழ்க அன்பு அறமென எழுக – நீளிரா பட விழாவில் ஆவேசமாக பேசிய இயக்குனர்!

- Advertisement -

சென்னையில் சமீபத்தில் நடந்த நீளிரா படவிழாவில் இயக்குனர் வசந்த பாலன் பேசியதாவது, தூர்தர்ஷன் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட போது ஒளிபரப்பான சீரியல் ராமாயணம். இந்தியா முழுக்க ராமாயணம் ஒளிபரப்பானது. எல்லா ஊரிலும் ராமாயணம் ஒளிபரப்பாகும். அப்போது ஞாயிற்றுக்கிழமை சாமி கும்பிடவும் வழிபடவும் வணங்கவும் என நேரத்தை ஒதுக்க ஆரம்பித்தார்கள். இந்தியா முழுக்க அது ஒரு தீ போல பரவியது.

அப்படி பரவிய போது தான் ராமஜென்ம பூமி குழு ஒன்று கிளம்பி ஒரு பெரிய கருத்தியலை விதைக்கிறது. பாபர் மசூதி இடிப்பு இப்படியான கருத்தியல் இன்றும் இந்தியாவில் விதைக்கப்படுகிறது. காஷ்மீர் பைல்ஸ் ஆகட்டும் துரந்தர் படம் ஆகட்டும் இந்தியா முழுக்க இப்படி ஒரு வெறுப்பை பரப்பக்கூடிய பெரிய சூழலில், வெறுப்புக்கு எதிராக கலையை கையில் வைத்திருக்கும் இயக்குனர்கள் இந்திய இயக்குனர்கள் மட்டும்தான் என்பதை ஆணித்தரமாக சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

- Advertisement -

வெற்றிமாறன் கார்த்திக் சுப்பராஜ் ராஜூமுருகன் வரைக்கும் இந்தியாவில் இருக்கும் மொத்த சினிமாவின் வழியாக எதிர்ப்பு முன் வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்தியா முழுக்க ஆயுதமும் ரத்தமும் வெறுப்பும் ஏதேதோ காரணத்திற்காக கக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. படங்கள் மூலமாக அதனை எதிர்க்க வேண்டிய சூழலில், வெறுப்பின் கொட்டம் வீழ்க அன்பு அறமென எழுக என சொல்லும் படமாக தான் நீளிரா படத்தை பார்க்கிறேன்.

இந்த படத்தை பார்க்க செல்லும் முன், என் மகன் போர் வந்துவிடுமா? மறுபடியும் லாக் டவுன் வந்துவிடுமா என்று என்னிடம் கேட்கிறான். என் மனைவி சினிமா எல்லாம் இருக்குமா? மொத்தமாக மூடி விடுவார்களா எனவும் கேட்டார். அந்த கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தேர்தலுக்குப் பிறகு நாம் கடுமையான சூழலை சந்திக்க இருக்கிறோம்.

- Advertisement -

போரின் மொத்த சூழலும் நம் ஊருக்குள் நம் வீட்டுக்குள் வரப்போகிறது. அது தவிர்க்க முடியாததாக இருக்கும். போர்க் கதைகளை ரத்தம் தெறிக்க துப்பாக்கி வெடிக்க கேட்டுக் கொண்டிருந்த சூழலில் சத்தம் இல்லாமல் ஒரு மரணம் கூட இல்லாமல் சோமிதீரன் நீளிரா படத்தை எடுத்த விதம் கலையின் தீவிர தன்மையை காட்டுகிறது. இந்த படத்தை ஏன் நேசிக்கிறேன் என்றால் எதுவும் இல்லாமல் ஒரு கலையை முன்வைக்க முடியும் என்று அவர் காட்டி இருக்கிறார்.

ஒரு மரணம் நிகழக் கூடாது என்பதை முன்வைக்கும்போது இவன் பெரிய ஆள் என்று தோன்றியது. இந்த படத்தின் இறுதியில் இந்திய ராணுவத்தின் தலைவன் மன்னிப்பு கேட்பான். போர் நடக்கும் எல்லா இடங்களிலும் போய் இப்படி மன்னிப்பு கேட்க போகிறீர்களா என்று ஒரு கேள்வி வரும். அது ஏதேச்சிய அதிகாரத்தை பார்த்து கேட்கும் கேள்வி என்று இயக்குனர் வசந்தபாலன் அந்த விழாவில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்