- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா 2 படத்தில் அந்த ஒரு காட்சியில் நடிக்க நான் மிகவும் பயந்தேன் - ஐகான்...

புஷ்பா 2 படத்தில் அந்த ஒரு காட்சியில் நடிக்க நான் மிகவும் பயந்தேன் – ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

கடந்தாண்டில் வெளியான இந்திய படங்களில் உலகளவில் ரூ. 1800 கோடி வசூலித்து மாபெரும் வெற்றியை பெற்ற படம் புஷ்பா 2. சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா சுனில் பகத் பாசில் ரமேஷ் ராவ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. தெலுங்கு தமிழ் இந்தி என புஷ்பா 2 சக்கைப்போடு போட்ட பான் இந்தியா படமாகும்.

இந்த படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி ரிலீஸான நிலையில், அதற்கு முந்தைய நாள் 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் பிரிமியர் ஷோ காட்டப்பட்டது. அந்த ஷோவில் நடிகர் அல்லு அர்ஜூனும் பங்கேற்ற நிலையில், ரசிகர்கள் மத்தியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் ரசிகை உயிரிழந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த விவகாரத்தை அடுத்து நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்த ஐதராபாத் போலீசார், பிறகு ஜாமீனில் விடுதலை செய்தனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இனி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்ற அரசு அறிவிப்பும் வெளியானது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 2 கோடி வரை படக்குழு தரப்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்த விவகாரங்கள் எல்லாம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தினாலும் மற்றொரு புறம் புஷ்பா 2 படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் அமோக ஆதரவை வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இன்னும் சில ஆண்டுகளில் புஷ்பா 3 படம் உருவாகி திரைக்கு வர உள்ளது. அதுபற்றிய அறிவிப்பும் இன்னும் சில மாதங்களில் படக்குழு சார்பில் அறிவிக்கப்படலாம்.

- Advertisement -

இந்நிலையில் புஷ்பா 2 படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு காட்சியில் படத்தின் ஹீரோ அல்லு அர்ஜூன் ஜாதரா காட்சியில் நடித்திருந்தார். பட்டுப்புடவை கட்டி பெண் வேடமிட்ட நிலையில் சண்டை காட்சியிலும் அல்லு அர்ஜூன் நடித்திருந்தார். படத்தில் இந்த காட்சி வேற லெவலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நடிகர் அல்லு அர்ஜூன் கூறுகையில், இயக்குனர் சுகுமாரன் ஜாதரா காட்சி குறித்து சொன்ன போது ஆரம்பத்தில் நான் மிகவும் பயந்தேன். ஒரு பெண் போல நீங்கள் புடவை கட்டிக்கொள்ள வேண்டும். மேக்கப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். எனக்கு பயமாக இருந்தாலும் அந்த காட்சியில் நடித்து முடித்துவிட்டேன் என்று வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்